பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடைபெற்ற பாமவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அன்பு மணி தேர்வு செய்யப்படுவதாக ஜி.கே.மணி அறிவித்துள்ளார். 25 வருடங்களாக ஜி.கே.மணி பாமகவின் தலைவராக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அன்புமணியை கண்ணீர் மல்க கட்டித் தழுவிய பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்தார்.
இதனையடுத்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்; 2012ல் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சி 2013ல் ஆட்சியை பிடித்தது கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி; ஆனால் நம்மால் ஏன் முடியவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நம்முடைய கொள்கைகள் போல் நாட்டில் வேறு கட்சிகள் ஏதாவது கொள்கைகளை கொண்டுள்ளதா? இல்லையெனில் ஏன் நம்முடைய பலம் 4லிருந்து 40 ஆக மாறவில்லை? இது யார் குற்றம்? இந்த குற்றத்தை மீண்டும் நீங்கள் செய்யப்போகிறீர்களா? என பேசியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…