Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

திமுக மாநிலங்களவைக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!

UDHAYA KUMAR May 15, 2022 & 13:45 [IST]
திமுக மாநிலங்களவைக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு!Representative Image.

மாநிலங்களவையில் காலியாக இருக்கும் 57 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தமிழகம் சார்பில்  6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியிட முடியும். தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இது முடிவு செய்யப்படும். தி.மு.க. சார்பில் போட்டியிடும்  3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஒருவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 

வரும் ஜூன் மாதம் 10ம் தேதி தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 12ம் தேதி அறிவித்திருந்த நிலையில், திமுக சார்பில் தஞ்சை சு.கல்யாண சுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், இரா.கிரிராஜன் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 4 உறுப்பினர்கள் தி.மு.க. சார்பில் 3 பேரும், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்