ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலகளவில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நிலக்கரிக்கும் தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பல ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயுவை வைத்து விளையாட்டு காட்டி வருகிறது. இந்நிலையில், எரிவாயு பற்றாக்குறை காரணமாக ஜெர்மனி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. இதனால் உலக அளவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.
உலக நிலக்கரி விலை அதிகரித்து வரும் நிலையில், இந்திய நிறுவனங்கள் வெனிசுலாவிலிருந்து அதிக அளவில் பெட் கோக்கை இறக்குமதி செய்து வருவதாக வர்த்தக ஆதாரங்கள் மற்றும் கப்பல் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்திய சிமென்ட் நிறுவனங்கள் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 1,60,000 டன் பெட்ரோலியம் கோக்கைக் இறக்குமதி செய்துள்ளதாக வர்த்தக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…