தூக்க மருந்து தர மறுத்த மருத்துக் கடை உரிமையாளரை இருவர் சேர்ந்து தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்ட வடவேர் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், குடவாசலில் இயங்கி வரும் சூர்யா மெடிக்கல் கடைக்கு அடிக்கடி சென்று தனக்கு தூக்க மாத்திரை தருமாறு கேட்டு வந்துள்ளார். மருத்துக்கடை உரிமையாளரோ மருந்துச் சீட்டு இல்லாமல் எந்த மருந்தும் வழங்குவதில்லை என கடுமையாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செந்தில் தனது அண்ணான் மகனை அழைத்து வந்து மருத்துக்கடை உரிமையாளரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொண்டு செந்தில் மீது மருந்துக்கடை உரிமையாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…