Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வருகிறார்- காவேரி மருத்துவமனை

Bala July 15, 2022 & 17:20 [IST]
முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வருகிறார்- காவேரி மருத்துவமனைRepresentative Image.

முதல்வர் ஸ்டாலின் குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து, அவர் சிகிச்சைபெறும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "முதல்வருக்கு பரிசோதனைகள் அனைத்தும் செய்யப்பட்டு, கொரோனாவுக்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர் விரைவாக குணமடைந்து வருகிறார். முதல்வர் மேலும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து,  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்  குணமடைய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள பசவராஜ் பொம்மை, ''கொரோனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நலம் பெற்று, மீண்டும் தமிழ்நாடு மக்களுக்கு சேவை புரிய விரும்புகிறேன்'' என்றார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்