Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இலங்கை செல்லும் சீன உளவு கப்பல்...? உஷார் படுத்தப்பட்ட இந்திய கடற்படை...!

Bala July 29, 2022 & 14:40 [IST]
இலங்கை செல்லும் சீன உளவு கப்பல்...? உஷார் படுத்தப்பட்ட இந்திய கடற்படை...! Representative Image.


இந்திய பெருங்கடலின் சிறிய தீவு நாடான இலங்கைக்கு சீனா உளவு கப்பலை அனுப்பவுள்ளதாக வெளியான தகவல் பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள இலங்கையை  தன்வசப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா சீனா உள்ளிட்ட நாடுகள் நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறது. புவியியல் ரீதியாக முக்கிய இடத்தில் அந்த நாடு உள்ளதால் அதனை எப்படியாவது தன் வசப்படுத்த வேண்டும் என துடிதுடித்து வருகிறது அமெரிக்கா. மறுபக்கம் இந்தியாவை நாலா பக்கமும் சுற்றி வளைக்கும் முயற்சியில் தற்போது சீனாவும் இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை தன்வசப்படுத்திய சீனா அங்கு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதால் இந்தியாவும் அதற்கேற்ற ராணுவ நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 

இந்தநிலையில் இலங்கையையும் கைப்பற்றி விட்டால் இந்தியாவை எளிதாக லாக் செய்து விடலாம். இதன் காரணமாக இலங்கைக்கு அதிகப்படியான கடன்களை வழங்கியது சீனா. அந்த கடனை செலுத்த முடியாத இலங்கை தன் நிலைப்பரப்பை சீனாவுக்கு வாரி வழங்கி வருகிறது. இந்தியா இலங்கைக்கு எவ்வளவு உதவி செய்தாலும், சிங்களவர்களின் மனநிலை இந்தியர்களுக்கு எதிராகவே உள்ளதால் இந்தியாவின் ராஜதந்திரம் எதுவும் அங்கு பலிக்கவில்லை.

இந்நிலையில், இலங்கை கடலுக்கு சீனா உளவு கப்பலை அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்திய பெருங்கடலில் நிலை கொண்டுள்ள இந்திய போர் கப்பல்கள் உஷார் படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கை தெற்காசியாவின் அமைதியை சீர்குலைக்கும் என்றும், சீனா தொடர்ந்து ராணுவ நகர்வுகளை மேற்கொண்டால், இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நடுகளின் சார்பு நிலை எடுக்கும் என்றும், இதனால் இந்தோ-பசிபிக் நிலப்பரப்பில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

லடாக் மற்றும் அருணாச்சலபிரதேசங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா படைகளை குவித்து அவ்வப்போது போர்ப்பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு அதிநவீன வான் பாதுகாப்பு சாதனமான எஸ்400 ஐ இந்தியா நிலை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்