Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிங்கம் வாங்கலையோ சிங்கம்.. எருமையை விட விலை கம்மி தாங்க.. எங்கே தெரியுமா?

Sekar July 29, 2022 & 14:22 [IST]
சிங்கம் வாங்கலையோ சிங்கம்.. எருமையை விட விலை கம்மி தாங்க.. எங்கே தெரியுமா?Representative Image.

பாகிஸ்தானில் காட்டின் ராஜாவாக கருதப்படும் சிங்கத்தை எருமை மாட்டை விட மலிவான விலையில் வாங்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லாகூர் சஃபாரி மிருகக்காட்சிசாலை நிர்வாகம், தான் பராமரித்து வரும் சில ஆப்பிரிக்க சிங்கங்களை, ஒரு சிங்கம் 1,50,000 ரூபாய்க்கு (பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில்) என அற்ப விலைக்கு விற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் ஒரு எருமையின் விலை அந்நாட்டு மதிப்பில் ரூ.3,50,000 முதல் ரூ.10 லட்சம் வரை விற்கப்படுவதாக கூறப்படும் நிலையில், சிங்கத்தை சில்லறை விலைக்கு விற்கும் அந்நாட்டு மிருகக்காட்சி சாலையின் முடிவு சூழலியலாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஆனால் பாகிஸ்தான் அரசைப் போலவே கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வரும் லாகூர் சஃபாரி உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கு சிங்கங்களை விற்று நிதி திரட்டுவதைத் தவிர வேறு வழியில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 12 சிங்கங்களை விற்று போதிய பணத்தை திரட்டி விடலாம் என நம்புவதாகத் தெரிவித்துள்ளது.

லாகூரில் உள்ள சஃபாரி உயிரியல் பூங்கா, நாடு முழுவதும் உள்ள மற்ற உயிரியல் பூங்காக்களைப் போலல்லாமல், மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ளது. 142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கு ஏராளமான வன விலங்குகள் உள்ளன. அங்கு சிங்கங்கள் மட்டுமே சுமார் 40 எனும் எண்ணிக்கையில் இருப்பதாகக் கூறப்படுகிறது .

மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் சிங்கங்களை நிர்வகிப்பது கடினம் மட்டுமல்ல, மிகவும் அதிக செலவாகும். எனவே, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் ஒரு சில சிங்கங்களை விற்று அதில் கிடைக்கும் வருமானத்தின் மூலம் செலவுகளை சமாளிக்க முடியும் என நிர்வாகம் நம்புகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டும் இதே சஃபாரி மிருகக்காட்சிசாலையில் இடம் குறைவாக இருப்பதாகக் கூறி, 14 சிங்கங்கள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்