Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#Breaking : திமுக ஐடி விங் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்..!!

Sekar July 13, 2022 & 17:55 [IST]
#Breaking : திமுக ஐடி விங் ட்விட்டர் கணக்கு திடீர் முடக்கம்..!!Representative Image.

திமுக ஐடி விங்கின் ட்விட்டர் ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் மக்கள் மத்தியில் நேரடியாக தனது சித்தாந்தத்தையும் செயல்பாடுகளையும் கொண்டு சேர்த்த காலம் போய் இப்போது அனைத்து கட்சிகளுமே களத்தில் செயல்படுவதற்கு நிகராக சமூக வலைத்தளத்திலும் செயல்பட்டு வருகின்றன.

சமூக ஊடகமான ட்விட்டரில் திமுக ஐடி விங் சமீபகாலமாக மிக தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென முடக்கப்பட்டுள்ளது திமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது எதனால் நடந்தது என்பது இதுவரை தெரியாத நிலையில், ஹேக்கர்களின் கைவரிசையா அல்லது ட்விட்டரே கணக்கை நீக்கிவிட்டதா என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

இந்த தகவல் சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாய் பரவிய நிலையில், சற்று நேரத்திலேயே திமுகவின் ஐடி விங் ட்விட்டர் ஐடி மீண்டும் மீட்டெடுக்கப்பட்டு விட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்