Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

போதை விழிப்புணர்வு வாரம் - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..!

Bala August 10, 2022 & 12:10 [IST]
போதை விழிப்புணர்வு வாரம் - பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு..! Representative Image.

ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டும் போதைப் பொருட்ளுக்கு எதிரான உறுதிமொழியை நாளை ஏற்க வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 11-ம் தேதி போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிலையில் தமிழகத்தில் போதைப்பொருள்களை ஒழிப்பது தொடர்பாக முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்று வருகிறது.இக் கூட்டத்தின் இறுதியில் போதைப் பொருட்களுக்கான தடை உள்ளிட்டவை குறித்த முக்கிய அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், ஆகஸ்ட் 12ம் தேதி முதல் 19ம் தேதி வரை போதை பொருள் விழிப்புணர்வு வாரம் கொண்டாட வேண்டும் போதைப் பொருட்ளுக்கு எதிரான உறுதிமொழியை நாளை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்