நண்பனின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில், நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடியதோடு, தலையில் தீ வைத்து விளையாடியது பகீர் கிளப்பியுள்ளது.
பிறந்தநாள் என்றால், கேக் வெட்டி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இருந்த காலம் போய், இப்போதெல்லாம் இளைஞர்கள் வித்தியாசமான முறையில் பிறந்தநாள் கொண்டாடுவது வாடிக்கையாகி விட்டது.
அந்த வகையில் ஒருவரின் பிறந்த நாளை, அவரது நண்பர்கள் வித்தியாசமான முறையில் கொண்டாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சாலையில் வைத்து பைக்கின் மேல், கேக் வெட்ட வைத்து, நண்பனின் தலையில் ஸ்ப்ரே அடித்து அதில் தீ வைத்து விளையாடியுள்ளது பதிவாகியுள்ளது.
பின்னர் நண்பர்களே சிரித்துக்கொண்டு ஹாயாக அந்த தீயையும் அணைத்துள்ளனர். இதை பார்த்த பலரும், பிறந்த நாளை இறந்தநாள் ஆக்கிடுவாங்க போலயே என கருத்து கூறி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…