Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உஷார்..இனி இப்படி பேசினால் ஆபத்து...? உயர்நீதிமன்றம் அதிரடி...!

Bala August 17, 2022 & 14:47 [IST]
உஷார்..இனி இப்படி பேசினால் ஆபத்து...? உயர்நீதிமன்றம் அதிரடி...!Representative Image.

கணவன் தன் மனைவியை மற்ற பெண்களுடன் ஒப்பிட்டு, தன் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்று பலமுறை கிண்டல் செய்வது கொடுமை தான் என்றும், இது விவாகரத்துக்கான காரணமாகவும் எடுத்துக்கொள்ளலாம் என கேரள உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 4 அன்று தீர்ப்பளித்தது.

நீதிபதி அனில் கே நரேந்திரன் மற்றும் நீதிபதி சி.எஸ்.சுதா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், கொடுமையின் அடிப்படையில் மனைவியின் மனு மீது விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கணவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டை  பரிசீலித்து வந்தது. அதில் மனுதாரர் (கணவர் )தனது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மனைவி இல்லை என்று தெரிவித்தார்.

அதற்கு தோற்றத்தில் கணவரது எதிர்பார்ப்புகளை மனைவி பூர்த்தி செய்யவில்லை என்றும், மனைவி அவருக்கு அழகாக இல்லை என்றும், அழகையும், தோற்றத்தையும் பிற பெண்களுடன் ஒப்பிடும் போது அவர் ஒரு மனக்குழப்பம் கொண்டவர் என்றும் தனது கணவர் தொடர்ந்து தனக்கு இப்படி தொல்லைகள் தருவதாக மனைவி குற்றம் சாட்டியுள்ளார். 

திருமண முறிவு என்பது விவாகரத்துக்குப் போதுமான காரணம் இல்லை என்றாலும், இந்த உண்மையை சட்டம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்