Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

7,000 த்தைக் கடந்த பாதிப்புகள்.. மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா!!

Sekar June 09, 2022 & 14:05 [IST]
7,000 த்தைக் கடந்த பாதிப்புகள்.. மீண்டும் விஸ்வரூபமெடுக்கும் கொரோனா!!Representative Image.

இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 7,240 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளும், 8 இறப்புகளும் பதிவாகியுள்ளன. 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று பகிர்ந்துள்ள தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 3,591 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த மீட்பு விகிதம் சுமார் 98.71 சதவீதமாக உள்ளது மற்றும் மொத்த மீட்பு எண்ணிக்கை 4,26,40,301 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 32,498 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று, 28,857 ஆக இருந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை மொத்த நோய்த்தொற்றுகளில் 0.08 சதவீதம் ஆகும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை தற்போது 5,24,723 ஆக அதிகரித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்