Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

லிப் லாக் கிஸ்ஸிங் குற்றமில்லை:- அது அன்பின் அடையாளம்..அதிர்சி கொடுத்த ஐகோர்ட்...

Bala May 16, 2022 & 11:47 [IST]
 லிப் லாக் கிஸ்ஸிங் குற்றமில்லை:- அது அன்பின் அடையாளம்..அதிர்சி கொடுத்த ஐகோர்ட்...Representative Image.

பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது ஒன்றும் குற்றமான செயல் இல்லை என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு  ஜாமீன் வழங்கிய  ஐகோர்டின்  தீர்ப்பு அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

ஆன்லைன் கேம் ரீசார்ஜ் செய்ய சிறுவன் ஒருவன் வாடிக்கையான கடைக்கு சென்றுள்ளான். அப்போது அந்தக் கடையின் உரிமையாளர் சிறுவனுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தும், அந்தரங்கை உறுப்பை தொட்டும் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். மேலும் சிறுவனிடம் இருந்து தொடர்ந்து பணமும் வாங்கி வந்துள்ளார்.

திடீரென வீட்டில் பணம் காணாமல் போனது தொடர்பாக  சந்தேகமடைந்த  பெற்றோர் அவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது பெற்றோரிடம் அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளான். இதனால் அதிர்சியடைந்த பெற்றோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் கடையின் உரிமையாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடை உரிமையாளர் ஜாமீன் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதிகள், சிறுவனின் அந்தரங்க உறுப்பை தொட்டும், உதடுகளில் முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377ன் கீழ் எனது பார்வையில் இது முதன்மையான குற்றமாக இருக்காது. உதட்டு முத்தம் கொடுப்பது குற்றமாகது என்றும் அது அன்பின் அடையாளம் என்று கூறி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் அவர் மீது பதியப்பட்டுள்ள போக்சோ வழக்கையும் ரத்து செய்ய அவருக்கு உரிமை உள்ளதாக கூறியுள்ளார். இந்த தீர்ப்பு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்