Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

இன்ஸ்டகிராமில் இருந்த பிரச்சனை..! கண்டறிந்த இந்திய மாணவன்… மெட்டா நிறுவனம் அளித்த வெகுமதி..!

Gowthami Subramani September 20, 2022 & 13:30 [IST]
இன்ஸ்டகிராமில் இருந்த பிரச்சனை..! கண்டறிந்த இந்திய மாணவன்… மெட்டா நிறுவனம் அளித்த வெகுமதி..!Representative Image.

இன்ஸ்டகிராமில் தொழில்நுட்ப கோளாறைக் கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு மெட்டா நிறுவனம் வெகுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டகிராம் ரீல்ஸின் Thumbnail-ஐ ஒருவரது ஐடி மற்றும் Password இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம். இந்த தொழில்நுட்ப கோளாறை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மாணவனான நீரஜ் சர்மா கண்டறிந்தார்.

இது தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு இமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். பின்னர், கடந்த மே மாதம் இவர் அனுப்பிய அறிக்கையை ஏற்றுக் கொண்ட மெட்டா நிறுவனம், இவருக்கு வெகுமதி அளித்துள்ளது.

அதன் படி, மெட்டா நிறுவனம் நீரஜ் சர்மாவிற்கு அமெரிக்க டாலரில் 45 ஆயிரம் அனுப்பியுள்ளது. இது இந்திய மதிப்பீட்டில் சுமார் 35 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், வெகுமதி வழங்குவதில் நான்கு மாதங்கள் ஏற்பட்ட தாமதத்திற்குக் கூடுதலாக 4500 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 3 லட்சத்தை போனஸாக, மெட்டா நிறுவனம் நீரஜ் சர்மாவிற்கு வழங்கியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்