Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹேக்கிங்கிற்கு இரையான அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு.. மீட்க முயற்சி!!

Sekar September 04, 2022 & 12:16 [IST]
ஹேக்கிங்கிற்கு இரையான அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கு.. மீட்க முயற்சி!!Representative Image.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்ததோடு கிரிப்டோ கரண்சி தொடர்பான பதிவுகளையும் அவரது கணக்கில் பதிவிட்டுள்ளனர்.

பிரபல தலைவர்களின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளை ஹேக்கர்கள் அவ்வப்போது ஹேக் செய்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் ட்விட்டர் கணக்கையும் ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர்.

மேலும் அதில், "அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை.கோவிட் 19 உடன் போராடும் மக்களுக்கு உதவ $1 மில்லியன் திரட்ட விரும்புகிறோம்!

அனைவருக்கும் வணக்கம், எங்கள் கட்சி அதன் சொந்த கிரிப்டோ வாலட்டை உருவாக்கியுள்ளது. இன்று, முன்னெப்போதையும் விட, ஆற்றல் வளர்ச்சியில் உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. pic.twitter.com/QBSSLoHfh5

— Variorius (@V_Senthilbalaji) September 3, 2022

எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்திற்கு அனுப்பப்படும்” என்று ட்விட் செய்துள்ளனர். மேலும் செந்தில்பாலாஜியின் பெயரையும் நீக்கிவிட்டு Variorius என்று மாற்றியுள்ளனர். 

இதற்கிடையே கணக்கு ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக திமுக ஐடி விங் தலைவர் டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக இந்தியாவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தில் முறையாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இது சரி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்