Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எப்படியிருக்கீங்க.. ஸ்டாலின் மருத்துவமனை விசிட்!!

Sekar May 29, 2022 & 14:54 [IST]
எப்படியிருக்கீங்க.. ஸ்டாலின் மருத்துவமனை விசிட்!!Representative Image.

சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை வாய்ந்த கலைஞர் டி.ராஜேந்தரை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். 

டி.ராஜேந்தருக்கு கடந்த வாரம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட நடிகர் சிம்பு, திடீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். மேல்  சிகிச்சைக்காக விரைவில் வெளிநாடு செல்ல முடிவு செய்துள்ளதாகவும் கூறியிருந்தார். 

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரடியாக மருத்துவமனைக்கு சென்று டி.ராஜேந்தரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் டி.ராஜேந்தர் சிகிச்சை பெற்று வருகிறார்.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்