Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர்..!

Bala May 14, 2022 & 17:55 [IST]
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர்..!Representative Image.

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபெடரல் உச்ச கவுன்சில் இன்று அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் முகமது ஜனவரி 2005 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகளின் துணைத் தளபதியாகவும் பணியாற்றியுள்ளார். யுஏஇ ஆயுதப் படைகளை வியூகத் திட்டமிடல், பயிற்சி, நிறுவன அமைப்பு மற்றும் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவர் , மேலும், அவரது தலைமையின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதப் படைகள் சர்வதேச ராணுவ அமைப்புகளால் பெரிதும் போற்றப்படும் ஒரு முன்னணி நிறுவனமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்