Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை சட்டம்.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!

Sekar September 26, 2022 & 19:16 [IST]
ஆன்லைன் ரம்மிக்கு அவசர தடை சட்டம்.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்!!Representative Image.

தமிழகத்தல் பல உயிர்களைக் காவு வாங்கிய ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள அவசர தடைச் சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அது செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து மீண்டும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய புதிய சட்டம் கொண்டு வர முடிவு செய்த திமுக அரசு, இதற்காக முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் தனியாக ஒரு குழுவை அமைத்தது.

இந்த குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான டாக்டர் லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். 

இந்த குழு சமர்ப்பித்த அறிக்கை, பொதுமக்கள் கருத்துக்கள் ஆகியவற்றின் அடிபப்படையில் ஒரு வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டது. இதை அவசர சட்டமாக கொண்டு வர முடிவெடுத்த தமிழக அரசு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து விரைவில் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு இது சட்டமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்