Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

OneMLA-OnePension சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்...!

Bala August 14, 2022 & 14:43 [IST]
 OneMLA-OnePension சட்ட மசோதாவுக்கு  ஆளுநர் ஒப்புதல்...!Representative Image.

பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற  (OneMLA-OnePension ) சட்ட மசோதாவுக்கு பஞ்சாப் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ஓய்வூதியம் மற்றும் மருத்துவ வசதிகள் ஒழுங்குமுறை) திருத்த மசோதா பஞ்சாப் சட்டசபையில்  ஜூன் 30  நிறைவேற்றியது, இந்த மசோதா மூலம், பஞ்சாப் மாநிலத்தில் எம்எல்ஏக்கள் எத்தனை முறை தோ்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், அவா்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும். 

பஞ்சாபில் சுமார் 300 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளனர். மாநில அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி, புதிய சட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூபாய் 19.53 கோடி மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ்  ஆட்சிக் காலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி கட்சி (AAP) இந்த கோரிக்கைகளை முன்வைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்