Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 நாட்களுக்குப் பின் நடைபெறும் மகாராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்

Gowthami Subramani September 09, 2022 & 10:35 [IST]
10 நாட்களுக்குப் பின் நடைபெறும் மகாராணி எலிசபெத் உடல் நல்லடக்கம்Representative Image.

70 ஆண்டுகாலமாக ஆட்சி புரிந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத், செப்டம்பர் மாதம் 8 ஆம் நாளான நேற்று உயிரிழந்தார். இவருடைய உடல் நல்லடக்கம் 10 நாட்களுக்குப் பின் நடைபெறும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து மக்களால் அனைவராலும் விரும்பப்பட்ட, மகாராணி எலிசபெத், பக்கிங்காம் மாளிகையில் வசித்து வருகிறார். இவரின் தற்போதைய வயது 96 ஆகும். இவரது உடல்நலக் குறைவு காரணமாக, ஸ்காட்லாந்தில் உள்ள அவரது பண்ணையில் வசித்து வந்தார்.

இவ்வாறு மருத்துவக்குழு கண்காணித்து வந்த நிலையில் நேற்று ராணி எலிசபெத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, தீவிர சிகிச்சை பலனின்றி எலிசபெத் உயிரிழந்தார். இதனை அடுத்து, இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ஆம் சார்லஸ் பதவியேற்றுள்ளார்.

இதனை அடுத்து, உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் உடல் 10 நாள்களுக்குப் பின் நடைபெறும் எனவும், 5 நாள்கள் பொதுமக்கல் அஞ்சலிக்காக லண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அரங்கில் இவரது உடல் வைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்