Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமலாக்கத்துறை முன் 4வது நாளாக ஆஜரான ராகுல்காந்தி...!

Bala June 20, 2022 & 11:34 [IST]
அமலாக்கத்துறை முன் 4வது நாளாக ஆஜரான ராகுல்காந்தி...!Representative Image.


காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அமலாக்க துறை (ED) முன் நான்காவது நாளாக இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு-அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக ராகுல்காந்தி மற்றும் அவரது தாயார் சோனியாகாந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பட்டது. இந்நிலையில் சோனியாகாந்திக்கு உடல்நலக்குறைவு காரணமாக அவர் விசாரணைக்கு ஆஜராவதில் சிக்கல் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்தி மட்டும் விசாரணைக்கு ஆஜராகினார். 3 நாளாக சுமார் 30 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், 4வது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அமலாக்கத்துரை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை பாஜக அரசு பயன்படுத்துவதாகவும், இதன் மூலம் பாஜகவில் சேர பிற கட்சி உறுப்பினர்களை வற்புறுத்துவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. 

இந்நிலையில் சனிக்கிழமை ராகுல்காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  ஞாயிற்றுக்கிழமை (19.06.2022) அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்றும் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்திருந்த அவர், அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் நிற்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்