Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனிமே இவங்களோட ரேஷன் கார்டு நீக்கப்படுமா..? ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி தகவல்…

Gowthami Subramani [IST]
இனிமே இவங்களோட ரேஷன் கார்டு நீக்கப்படுமா..? ரேஷன் அட்டைதாரர்களுக்குக் கிடைத்த அதிர்ச்சி தகவல்…Representative Image.

உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, கடந்த 3 மாத காலமாக ரேஷன் பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை 13,11,716 ஆக உள்ளது. இவற்றைப் பற்றி விசாரிக்க உத்தரவு வழங்கப்பட்டது.

குறிப்பாக, குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள நபர்களில் யாரேனும் ஒருவர் வராமல், ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க முடியாது. இதன் மூலம், போலி குடும்ப அட்டைகள் ஓரளவு நீக்கப்பட்டது. அதன் படி, ரேஷன் பொருள்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு அவர்களின் மொபை எண்ணிற்கு அழைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், மாவட்ட வழங்கல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, கடந்த 3 மாதங்களாக 13,11,716 குடும்ப அட்டைகள் ரேஷன் பொருள்களை வாங்கவில்லை. இதில், மதுரை மாவட்டத்தில் 78,982 கார்டுகள் விசாரிக்கப்பட்டுள்ளது. போலி ரேஷன் அட்டைகளாக இருக்கலாமா? அல்லது குடும்ப அட்டைதாரர்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கலாமா? போன்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரிக்கப்படுகிறது. உடனடியாக இவர்களுக்கான தகுதியை நீக்கம் செய்ய விசாரிக்கப்படவில்லை.

இருப்பினும், விசாரணை செய்து முடித்த பிறகு, இதற்கான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்