Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்ஃபுளுயன்சா காய்ச்சலின் எதிரொலி...! நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம்… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு...!

Gowthami Subramani September 20, 2022 & 14:00 [IST]
இன்ஃபுளுயன்சா காய்ச்சலின் எதிரொலி...! நாளை 1000 இடங்களில் சிறப்பு முகாம்… அமைச்சரின் அதிரடி அறிவிப்பு...!Representative Image.

தமிழகத்தில் இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா எனும் பேரிடர் இன்றும் இருந்துக் கொண்டிருக்கும் நிலையில், இன்ஃபுளுயன்சா வைரஸ் காய்ச்சலால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் 1166 பேர் இன்புளுயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவ நிலை மாற்றங்களால் காய்ச்சல் சற்று அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, நாளை அதாவது செப்டம்பர் 21 ஆம் நாள் தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அதன் படி, சளி, இருமல், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பாதிப்பு இருப்பவர்கள் சிறப்பு காய்ச்சல் முகாம்களுக்குச் சென்று பரிசோதிக்கலாம்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, “காய்ச்சல் தொடர்பன அறிகுறிகள் இருப்பின், முகாம்களுக்குச் சென்று பரிசோதிக்கலாம். மேலும், நடமாடும் மருத்துவ வாகங்கள் மூலமாகவும் பரிசோதித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்