Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு... உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!

Gowthami Subramani July 18, 2022 & 08:55 [IST]
பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி அறிவிப்பு... உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்...!Representative Image.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவி இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, தனியார் பள்ளி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், போராட்டங்கள் எழுந்தது.

நாடு முழுவதும் கொந்தளிக்கும் ஸ்ரீமதி மாணவியின் கொலை வழக்கில் தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட போராட்டம் மிகத் தீவிரமடைந்தது. இதில், தனியார் பள்ளி வளாகத்தினை தீ வைத்து எரித்தும், வண்டி வாகனங்களை சேதப்படுத்தியும், போராட்டக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால், பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியினை உடனடியாகத் திறக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டது. மேலும், தனியார் பள்ளியின்  மீது நடந்த இந்த போராட்டத்தினை எதிர்த்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் அவர்கள் நாளை முதல் பள்ளிகள் இயங்காது என தெரிவித்தார்.

இதற்கு பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாட்டில் இன்று வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என அறிவித்துள்ளது. மேலும், தன்னிச்சையாக விடுமுறை அளிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்