Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அமித்ஷாவின் செருப்பை சுமந்து செல்லும் பாஜக மாநில தலைவர்...!

Bala August 22, 2022 & 14:17 [IST]
அமித்ஷாவின் செருப்பை சுமந்து செல்லும் பாஜக மாநில தலைவர்...!Representative Image.


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காலணிகளை தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கான மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள உஜ்ஜைனி மகான்காளி கோவிலில் இருந்து அமித் ஷா வெளியே வந்தபோது, ​​நாடாளுமன்ற உறுப்பினரும், தெலுங்கானா பாஜக தலைவருமான  சஞ்சய் குமார், அமித்ஷாவின் காலணிகளை சுமந்து கொண்டு செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. 

இது தொடர்பாக தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) தலைவர் கே.டி.ராமராவ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,  இவர்கள் குஜராத் தலைவர்களின் அடிமை' என்றும், குஜராத்திகளின் காலணிகளை சுமக்கும்  அடிமைகளை தெலுங்கானா மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்,தெலுங்கானாவின் சுயமரியாதையை இழிவுபடுத்தும் எந்த முயற்சியையும் மக்கள் முறியடிப்பார்கள்" என்றும் , தெலுங்கானாவின் சுயமரியாதையை அவமதிப்பவர்களை நிராகரிக்கவும், தெலுங்கானாவின் சுயமரியாதையை பாதுகாக்கவும் அனைத்து சமூக பிரிவினரும் தயாராக உள்ளனர் என டிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் ட்வீட் செய்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்