Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோதுமை இறக்குமதியா.. அது உண்மையில்லை.. மறுக்கும் மத்திய அரசு!!

Sekar August 21, 2022 & 19:46 [IST]
கோதுமை இறக்குமதியா.. அது உண்மையில்லை.. மறுக்கும் மத்திய அரசு!!Representative Image.

இந்தியாவில் மக்களுக்கு உணவளிக்க போதுமான கோதுமை உள்ளது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்தியா கோதுமையை இறக்குமதி செய்ய உள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது. 

முன்னதாக, உற்பத்தி குறைவு மற்றும் வெப்ப அலைகளால் விலைவாசிகள் மோசமடைந்ததால் தானிய இறக்குமதியை பரிசீலிக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படலாம் என ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவல் பல்வேறு ஊடகங்களிலும் வைரலாக பரவியது.

 

"இந்தியாவில் கோதுமையை இறக்குமதி செய்யும் திட்டம் எதுவும் இல்லை. நமது உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு கையிருப்பு உள்ளது மற்றும் இந்திய உணவுக் கழகத்திடம் பொது விநியோகத்திற்கு போதுமான கையிருப்பு உள்ளது" என்றுமத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளது.

There is no such plan to import wheat into India. Country has sufficient stocks to meet our domestic requirements and @FCI_India has enough stock for pubic distribution.

— Department of Food & Public Distribution (@fooddeptgoi) August 21, 2022

முன்னதாக செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க், கருத்து கேட்கும் மின்னஞ்சலுக்கு நிதி அமைச்சகம் பதிலளிக்கவில்லை என்றும் உணவு மற்றும் வர்த்தக அமைச்சகங்களின் செய்தித் தொடர்பாளர் பதிலளிக்க மறுத்துவிட்டார் என்றும் கூறி அந்த செய்தியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்