Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 74,077.04
1,080.73sensex(1.48%)
நிஃப்டி22,472.80
349.15sensex(1.58%)
USD
81.57
Exclusive

BREAKING : ஆன்லைன் ரம்மிக்கு தடை.. ஆளுநர் ஒப்புதல்.. அரசிதழில் வெளியீடு!!

Sekar October 07, 2022 & 18:02 [IST]
BREAKING : ஆன்லைன் ரம்மிக்கு தடை.. ஆளுநர் ஒப்புதல்.. அரசிதழில் வெளியீடு!!Representative Image.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்து வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும் அந்த சட்டம் செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

ஒருபக்கம் ஆன்லைன் ரம்மியால் தொடர் தற்கொலைகள் அரங்கேறி வந்த நிலையில், ஆன்லைன் ரம்மி குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு குழு அமைத்திருந்தது. இந்த குழு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த நிலையில், அதன் அடிப்படையில் அவசர தடை சட்டம் கொண்டுவரப்பட்டு, அதற்கு கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அவசர சட்டத்திற்கு அக்டோபர் 1 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் கூடவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில், ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான நிரந்தர சட்டத்திற்கான மசோதாவை தமிழக அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்