Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது இதுக்கு தானா? வைரலாகும் 'Before and After Elon Musk' போட்டோஸ்...

Nandhinipriya Ganeshan Updated:
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது இதுக்கு தானா? வைரலாகும் 'Before and After Elon Musk' போட்டோஸ்...Representative Image.

சமீபத்தில் தான் உலக பெரும் பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உரிமையாளருமான எலான் மஸ்க் பிரபல சமூகவலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். ட்விட்டரை வாங்கியதில் இருந்து மஸ்க் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இவை அனைத்தும் சர்தேச அளவில் கவனம் பெற்று வருகிறது. அதன்படி, முதல் வேலையாக அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வாலை வேலையை விட்டு அனுப்பினார். மேலும், தலைமை செயல் அதிகாரி, தலைமை நிதி அதிகாரி, பொது ஆலோசகர் என மொத்தம் 3700 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கினார். 

அதோடு, ட்விட்டர் நிறுவனம் வருவாயை பெருக்கி அதிக லாபத்தை பெறத்தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை சந்திக்கும் என்று எச்சரித்து இருந்த எலான் மஸ்க், பல்வேறு செலவீன குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்துவந்தார். அதன்படி, வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு தடை விதித்தும், தினமும் 12 மணி நேரம் என 7 நாட்களும் வேலை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கு விருப்பம் இல்லாதவர்கள் 17 ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அதன்படி, 17 ஆம் தேதி வரை 1,200 ஊழியர்கள் முன் வந்து தங்களது வேலையினை ராஜினாமா செய்தனர். இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக அலுவலங்களை ட்விட்டர் தற்காலிகமாக மூடியது. ஊழியர்கள் கொடுக்கப்பட்ட ஆக்சஸ் கார்டுகள் எல்லாம் முடக்கப்பட்டன. இது உலக முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனாலும் இதற்கெல்லாம் நான் கவலைப்பட போவது இல்லை என்று எலான் மஸ்க் கூறியிருந்தார்.

ட்விட்டரில் நிலவி வரும் இத்தகைய பதற்றமான நிலைக்கு மத்தியிலும் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பும், வாங்கியதற்கு பின்பும் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. யூடியூபர் ஒருவரால் பகிரப்பட்ட இந்த பதிவில், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கு முன்பு பெரும்பாலும் பெண்கள் பணியாற்றியிருப்பதையும், வாங்கியதற்கு பின்பு ஆண்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள் என்பதை குறிப்பிடுகிறது. அதாவது, பாலின வேறுபாடு விளையாடுவதை உணர்த்துகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்