Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்... 

Nandhinipriya Ganeshan November 09, 2022 & 19:11 [IST]
ஃபேஸ்புக் நிறுவனத்தின் அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்... Representative Image.

செப்டம்பர் மாதத்தின் பிற்பகுதியில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க், செலவு குறைப்பு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும், அதுமட்டுமல்லாமல் பல மறுசீரமைப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார். அதன்படி, சமுக வலைத்தளப் பிரிவில் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா இன்று உலகம் முழுவதும் உள்ள அதன் நிறுவனத்தின் மொத்த எண்ணிக்கையில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

வருவாயில் ஏமாற்றமளிக்கும் வீழ்ச்சியை தொடர்ந்து இந்த பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, அதன் பணியாளர்களில் சுமார் 50% குறைக்கப்பட்ட அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் மெட்டா நிறுவனத்தின் பணிநீக்கம் ஊழியர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்