Tue ,May 21, 2024

சென்செக்ஸ் 74,005.94
88.91sensex(0.12%)
நிஃப்டி22,502.00
35.90sensex(0.16%)
USD
81.57

குரு வக்ர பெயர்ச்சி 2023

குரு பகவான் யார்? தட்சிணாமூர்த்தி யார்? யாரை எப்படி வழிபட வேண்டும்? | Dakshinamoorthy Guru Bhagavan Difference in Tamil

Nandhinipriya Ganeshan February 02, 2023

நம்மில் பலரும் தட்சிணாமூர்த்தியும், குரு பகவானும் ஒன்று என நினைத்து குழம்பிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இருவரும் ஒன்று கிடையாது. தட்சிணாமூர்த்தி என்பவர் வேறு, குரு பகவான் என்பவர் வேறு. பெரும்பாலானோர் கோயில்களில் வியாழக்கிழமைகளில் குரு பகவானை வணங்குவதற்கு பதிலாக தட்சிணாமூர்த்தியை வணங்கி, பரிகார பூஜைகளை செய்து வருகின்றனர். குரு பகவானுக்குரிய மஞ்சள் நிற வஸ்திரத்தை தட்சணாமூர்த்திக்கு அணிவிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், குருகிரக நைவேத்தியப் பொருட்களாக கொண்டை கடலை மாலை, கொண்டை கடலை சாதம் போன்றவற்றை தட்சிணா மூர்த்திக்கு நிவேதனம் செய்கிறார்கள்.

ஜீவன குரு சஞ்சாரத்தால் இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக இருக்கணும்.. | Kadagam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan February 02, 2023

குரு பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவான் உங்க ராசிக்கு பாக்கிய ஸ்தானத்திலிருந்து ஜீவன ஸ்தானத்திற்கு பெயர்ச்சியாகிறார். அதாவது 9 ஆம் இடத்திலிருந்து 10 வது வீட்டிற்கு பெயர்ச்சியாகிறார். இது அவ்வளவு சிறப்பு கிடையாது. அதுமட்டுமல்லாமல், அஷ்டம சனியும் கூடவே இருக்கிறார். எனவே, மிகுந்த கவனமாக இருக்க வேண்டிய காலக்கட்டம். பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவானால் வாழ்க்கையில் பல யோகங்களை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், இந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு அனைத்துமே குறைய தொடங்கும்.

கடன் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்தாச்சு! | Midhunam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 27, 2023

புதன் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மிதுன ராசியினரே! எதையும் அதிபுத்திசாலிதனத்தோடு செயல்பட்டு சாதித்துக் கொள்வீர்கள். உங்களுக்கு நிர்வாக திறமையும், சாதுர்யமாக செயல்படும் ஆற்றலும் இயற்கையாகவே இருக்கும். விருப்பு, சிந்தனை, பேச்சு எல்லாவற்றிலும் சிறந்து விளங்கும் நீங்கள் மற்றவர்களை உற்சாகப்படுத்தி, அவர்கள் வெற்றியடைய வழிகாட்டுவதில் வள்ளவராக திகழ்பவர். எந்த காரியத்திலும் நிறந்தரமான ஈடுபாடு என்பது உங்களுக்கு இருக்கவே இருக்காது. இதனால், உங்களை பற்றி மற்றவர்களால் அவ்வளவு எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது. சில நேரங்களில் சந்தேகப்படுவதும், சஞ்சலப்படுவதும் உங்களுடைய பலவீனம்.

குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு ஏற்படும் முக்கிய திருப்பங்கள்.. | Rishabam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 20, 2023

சுக்கிர பகவானை ராசி அதிபதியாக கொண்ட ரிஷப ராசியினரே! எந்த விஷயத்திலும் அவசரம் காட்டாமல் பொறுமையுடன் செயல்படுவீர்கள். எதற்காகவும் ஆத்திரம்படவும் மாட்டீர்கள். பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது உங்களுக்கு மட்டுமே பொருந்தும். பொறுமையின் சிகரமென்றே உங்களை சொல்லலாம். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்தித்தே செயல்படுவீர்கள். எந்த கஷ்டம் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்ற மனஉறுதி படைத்தவர். கிட்டத்தட்ட அனைத்து விஷயத்திலும் சரிசமமாக பார்க்கும் மனநிலைப்படைத்தவர்.

ஜென்ம குரு சஞ்சாராத்தால் அடிக்கும் யோகம்.. | Mesham Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan January 19, 2023

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாக கொண்ட மேஷ ராசியினரே! எந்த காரியத்தையும் முட்டிமோதியாவது சாதித்துவிடுவீர்கள். அனைத்து செயல்களிலும் முழு வேகத்துடன் ஈடுபடுவீர்கள். முன்கோபம் அதிகம் கொண்ட உங்களுக்கு போராட்ட குணம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கும். உங்களை நம்பியவர்களுக்கு உதவி செய்வதில் வள்ளவர். மேலும், இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு பல நல்ல மாற்றங்களை கொண்டுவர இருக்கிறது. மேலும், இந்த குரு பெயர்ச்சியின் மூலம் குரு பகவான் உங்க ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் அமருகிறார். இந்த ஜென்ம குருவால் இதுவரை உங்களை மதிக்காமல் இருந்தவர்கள் அனைவருக்கும் உங்களின் மீது ஒரு மதிப்பு, மரியாதை ஏற்படும்.

சகல பாக்கியங்களும் தரும் பாக்கிய குரு.. இனி சிம்ம ராசிக்கு யோகம் தான்..| Simmam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan December 23, 2022

மனதில் பட்டதையெல்லாம் மறைக்காமல் பேசும் சிம்ம ராசி அன்பர்களே! சூரிய பகவானை ராசி அதிபதியாக கொண்ட நீங்க இதுவரைக்கும் யாருக்கும் எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் உதவி செய்துவருவீர்கள். அப்படிபட்ட உங்களுக்கு இதுவரை உங்க ராசியின் மறைவு ஸ்தானமான 8வது வீட்டிலிருந்து தடுமாற்றத்தையும், கையில் காசு பணம் இல்லாமல் களங்கவும் செய்த குருபகவான், இனி உங்க ராசிக்கு பாக்கிய வீடான 9ஆம் வீட்டில் நுழையவுள்ளார். இந்த யோகத்தால் இனி உங்க வாழ்க்கையில் பல விதமான நன்மைகள் நடக்கப்போகிறது. தொட்டது துலங்கும். 

குரு பகவானின் அருளால் 2023ல் அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.. | Guru Peyarchi 2023 to 2024

Nandhinipriya Ganeshan December 22, 2022

வியாழன் கிரகம் தான் தேவர்களின் குரு என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குருபகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாக குறைந்தது 12 மாதங்களாவது எடுத்துக் கொள்வார். அந்தவகையில், வருகின்ற 2023 புத்தாண்டில் குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குகிறது. அதுமட்டுமல்லாமல், குரு பகவானின் பெயர்ச்சி 12 ராசிக்காரர்களுக்கு தனது தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இதனால், அவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வ செழிப்பும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கும் திருமணம் யோகம் ஏற்படும். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டில் குரு பகவானின் பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெறப் போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம். 

Guru Peyarchi 2022 in tamil: இந்த 6 ராசிகள் குருப்பெயர்ச்சியால்  பெறும் அதிர்ஷ்டம் ஏராளம்!  

Manoj Krishnamoorthi April 15, 2022

Guru Peyarchi 2022 in tamil | 14.04.2022 முதல் 22.04.2023 இருக்கும் குருப்பெயர்ச்சியில் அதிக நற்பலனைப் பெறும் ராசிகள் பற்றிக் காண்போம்.

Kadagam Guru Peyarchi 2022 in Tamil | வேற எந்த ராசிக்கும் கிடைக்காத...அந்த பலன் இந்த பெயர்ச்சியால்...உங்களுக்கு கிடைக்கபோகுதாம்!

Priyanka Hochumin April 08, 2022

Kadagam Guru Peyarchi 2022 in Tamil: கடக ராசி அன்பர்கள் அனைவரும் மனோகாரகன் என்று அழைக்கப்படும் சந்திரனை ராசிநாதனாக கொண்டவர்கள்.