Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image.

வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார். 

அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 22, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசியிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், கும்ப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சி எந்த மாதிரியான பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

கும்பம் குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024

குரு பகவான் உங்க ராசிக்கு 2வது வீட்டிலிருந்து 3வது வீட்டில் சஞ்சாரம் செய்யவுள்ளார். ஏற்கனவே ஜென்ம சனி காலக்கட்டம் ஆரம்பம், தற்போது குரு பகவானும் சரியில்லாத இடத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். எனவே ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குரு பகவான் 3வது வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தைரிய குறைவு ஏற்படும், எதிலும் தயக்கம் காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியம் ரீதியாக அடிக்கடி சிக்கல் வரும். சிலருக்கு ஏற்கனவே வேலை செய்துக்கொண்டிருந்த இடத்தைவிட்டு இடமாற்றம் செய்யவோ அல்லது அந்த வேலையைவிட்டு விலகக்கூடிய சூழ்நிலையும் வரும்.

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

உத்தியோகம் நிமித்தமாக, தொழில் நிமித்தமாக ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். முக்கியமான பொருள் திருட்டுப்போக வாய்ப்புள்ளது. எனவே, தங்க நகைகள், செல்போன், வண்டி, வாகனம் ஆகியவற்றை பத்திரப்படுத்தி வைக்கவும். எதிரிகள் அதிகரிக்கும் காலம் அதனால் யாரிடமும் அதிகமாக பேசுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். எதிரிகளே வம்பிற்கு வந்தாலும் ஒதுங்கி இருப்பது நல்லது. மனக்குழப்பம் அதிகரித்துக் காணப்படும். எனவே, முடிந்தவரை மனதை தெளிவாக வைத்துக்கொண்டு வாழ்க்கை பற்றிய சிந்தித்து செயல்பட வேண்டும்.
 
ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

அதேபோல், உணர்ச்சிவசப்படுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் வீண் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே, உங்க வேலையுண்டு நீங்க உண்டு என்று இருந்தால் பிரச்சனை இருக்காது. பல அனுபவப் பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். கவலைப்படுவதை தவிர்த்துவிட்டு பிரச்சனையை சரிசெய்வதற்கான வழியை தேட முயற்சி செய்ய வேண்டும். மேலும், இளைய சகோதர்களுடன் வாக்குவாதங்கள் வரும். இப்படி, குரு பகவான் அமரக்கூடிய இடம் பல கலவையான பலன்களை கொடுப்பார். இருந்தாலும், பார்க்கக்கூடிய இடம் ஓரளவுக்கு ஓகேவாக இருக்கும்.

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

அதாவது குரு பகவான் தனது 5வது பார்வையாக உங்க ராசிக்கு 7வது வீட்டான களஸ்திர ஸ்தானத்தை பார்ப்பதால், திருமணத்தில் இருந்துவந்த தடை விலகி விரைவில் திருமண யோகம் ஏற்படும். காதலர்கள் தம்பதிகளாக மாற வாய்ப்புள்ளது. பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். சிலருக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். குடும்பம் மற்றும் சமுதாயத்தில் இழந்த மதிப்பு, மரியாதை மீண்டும் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு கிடைக்கும், இதனால் செல்வாக்கு உயரும். அடுத்ததாக, குரு பகவான் தனது 7வது பார்வையாக உங்க ராசிக்கு 9வது வீட்டான பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால், தந்தைக்கும் உங்களுக்கும் இருக்கும் பரஸ்பர நெருக்கம் அதிகரிக்கும். தண்ட செலவுகள் குறையும். 

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

தொழில் விழுந்த அடியால் ரொம்ப கவலையாக இருந்திருப்பீர்கள், அவை அனைத்தும் விலகும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு மனமகிழ்ச்சியை கொடுக்கும். தொட்டது துலங்கும். உறவுகளால் இன்பங்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பட்ட கஷ்டத்திற்கான பலனை பெறக்கூடிய காலம் வந்தாச்சு. மேலும், குரு பகவான தனது 9வது பார்வையாக உங்க ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால், கடன் தொல்லை அனைத்திற்கும் விடிவுகாலம் பிறந்தாச்சு. பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகள் அனைத்தும் லாபத்தை கொடுக்க ஆரம்பிக்கும். வேலையிழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

பரிகாரம்:

தினமும் காலை நேரத்தில் அரச மரத்தடியில் இருக்கும் ராகு, கேதுவுடன் கூடிய விநாயரை 12 அல்லது 21 முறை பிரதட்சணம் செய்வதன் மூலமாக வாழ்க்கையில் இருக்கும் துன்ப துயரங்களை அகற்றி, இன்பத்தை சேர்க்கும். அதேசமயம் இரவு 7 மணிக்கு மேல் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து அனுமன் சாலிசா சொல்லி வருவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

இதையும் படிங்க:

◆ மேஷம் குருப்பெயர்ச்சி பலன்

◆ ரிஷபம் குருப்பெயர்ச்சி பலன்

◆ மிதுனம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கடகம் குருப்பெயர்ச்சி பலன்

◆ சிம்மம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கன்னி குருப்பெயர்ச்சி பலன்

◆ துலாம் குருப்பெயர்ச்சி பலன்

◆ விருச்சிகம் குருப்பெயர்ச்சி பலன்

◆ தனுசு குருப்பெயர்ச்சி பலன்

◆ மகரம் குருப்பெயர்ச்சி பலன்

◆ கும்பம் குருப்பெயர்ச்சி பலன்

◆ மீனம் குருப்பெயர்ச்சி பலன்

ஜென்ம சனி ஒருபக்கம் இருந்தாலும், இந்த குரு பெயர்ச்சி அமோகமா இருக்கபோகுது.. குறிப்பா இதுல.. | Kumbam Guru Peyarchi Palan 2023 to 2024 in TamilRepresentative Image

பரிகாரம்:

தினமும் காலை நேரத்தில் அரச மரத்தடியில் இருக்கும் ராகு, கேதுவுடன் கூடிய விநாயரை 12 அல்லது 21 முறை பிரதட்சணம் செய்வதன் மூலமாக வாழ்க்கையில் இருக்கும் துன்ப துயரங்களை அகற்றி, இன்பத்தை சேர்க்கும். அதேசமயம் இரவு 7 மணிக்கு மேல் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து அனுமன் சாலிசா சொல்லி வருவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்