வியாழன் கிரகம் தான் தேவர்களின் 'குரு' என்று அழைக்கப்படுகிறார். என்ன தான் நாம் பணம், பொன், பொருளோடு இருந்தாலும் இவர் மனம் வைத்தால் மட்டுமே அவை அனைத்தும் நிலைத்து நிற்கும். அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, திருமணம் யோகம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக விளங்கும் குரு பகவான் ஒருவருடைய ராசியில் சுபமாக இருந்தால் அவருக்கு அதிர்ஷ்ட மழை தான். அதேபோல், குரு பகவானின் அனுகூலமான நிலை மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைத் தரக்கூடியவை. குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவதற்கு குறைந்தது 12 மாதங்களாவது (1 வருடம்) எடுத்துக் கொள்வார்.
அந்தவகையில், இந்த ஆண்டு குரு பகவான் ஏப்ரல் 21, 2023 ஆம் தேதி மீனத்தை விட்டு மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். குரு பகவானின் இந்த ராசி மாற்றம் கஜலக்ஷ்மி ராஜயோகத்தை உருவாக்குவதோடு, 12 ராசிக்காரர்களிலும் பல மாற்றங்கள் மற்றும் திருப்பங்களை ஏற்படுத்தும். அந்தவகையில், குரு பெயர்ச்சிக்கு பிறகு 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.
மேஷம் - சிவபெருமான் வழிபாடு செய்வது சிறப்பு. அதேபோல், குரு ஸ்தலங்களுக்கு சென்று ஒரு இரவு அங்கு தங்கி வழிபாடு செய்து வருவதால் குரு பகவானின் சாதக பலன்கள் அதிகரிக்கும், பாதக பலன்கள் குறையும்.
ரிஷபம் - வியாழக்கிழமை தோறும் கொண்டைக் கடலை சுண்டல் செய்து அம்பாளுக்கு வழிபாடு செய்துவிட்டு, ஏழை மக்களுக்கு விநியோகம் செய்வதால் குரு பகவானின் முழு பலன்களை பெற முடியும்.
மிதுனம் - வருடம் முழுவதும் முருகப் பெருமானை வழிபடுவதன் மூலமாக செவ்வாய் மற்றும் குரு பகவானின் பரிபூரண அருள் கிட்டும்.
கடகம் - சிவபெருமான் வழிபாடு செய்வது சிறப்பான பலனை அள்ளி கொடுக்கும். மலைமீதோ அல்லது மலைக்கு அருகில் இருக்கும் சிவபெருமான் கோயிலுக்கு சென்ற அந்த மலையை நீங்கள் பிறந்த கிழமையிலும், வெள்ளிக்கிழமையிலும் பிரதட்சணம் செய்வதன் மூலமாக இன்னல்கள் குறையும்.
சிம்மம் - உங்க ராசிநாதனான சூரியனை வழிபாடு செய்யலாம். உங்களால் முடிந்தால் மாதத்திற்கு ஒருமுறை சூரியணார் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்துவர சிறப்பான பலன்களை அனுபவிக்கலாம்.
கன்னி - வியாழக்கிழமை தோறும் மார்பில் லட்சுமி தாயார் இடம்பெற்றிருக்கும் ஹயக்ரீவரை வழிபாட்டு வருவதன் மூலமாக வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல்ரீதியான வருத்தங்கள் விலகும், பணவரவு அதிகரிக்கும்.
துலாம் - தினமும் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. மேலும், தினமும் சூரிய உதயத்திற்கு முன்பாக குளித்துவிட்டு 'ஓம் நமச்சியவாய' என்ற மந்திரத்தை 24 முறை சொல்ல வேண்டும். சூரிய உதயத்திற்கு பிறகு 7 மணிக்கு மேல் சிவன் கோயிலுக்கு சென்று சிவபெருமானை 3 முறை பிரதட்சணம் செய்துவர வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும் பெருகும்.
விருச்சிகம் - பிரதோஷ நாட்களில் சிவபெருமானுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வருவதன் மூலமாக இன்னல் குறையும். அதேசமயம், வீட்டிற்கு அருகில் இருக்கும் மாரியம்மன் கோவியிலில் உள்ள வேப்ப மரம் மற்றும் அரச மரம் இரண்டு மரங்களையும் தினமும் காலை 7.45 மணிக்கு முன்பாக 12 முறை பிரதட்சணம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரோக்கியப் பிரச்சனை அனைத்து பறந்தோடும். [ இதை ஜூன் மாதம் 20 முதல் நவம்பர் 21 ஆம் தேதி வரை கண்டிப்பாக செய்ய வேண்டும்.]
தனுசு - கருப்பண்ண சாமி, மாட சாமி போன்ற உக்கிர தெய்வங்களை வழிபட வேண்டும். அதேசமயம், காவல் தெய்வமான பைரவரை வழிபட்டு வருவதன் மூலமாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கையில் கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.
மகரம் - தத்தாத்ரேயரை வழிபாடு செய்வது சிறந்த பரிகாரம். அதேசமயம் வாரத்தில் இரண்டு முறை வேப்பிலை கொழுந்தை காலை நேரத்தில் சாப்பிட்டு வர உடலில் இருக்கும் விஷத்தன்மை நீங்கி, ஆரோக்கியம் மேம்படும்.
கும்பம் - தினமும் காலை நேரத்தில் அரச மரத்தடியில் இருக்கும் ராகு, கேதுவுடன் கூடிய விநாயரை 12 அல்லது 21 முறை பிரதட்சணம் செய்வதன் மூலமாக வாழ்க்கையில் இருக்கும் துன்ப துயரங்களை அகற்றி, இன்பத்தை சேர்க்கும். அதேசமயம் இரவு 7 மணிக்கு மேல் வீட்டின் பூஜை அறையில் அமர்ந்து அனுமன் சாலிசா சொல்லி வருவதன் மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
மீனம் - 7 வாரம் வியாழக்கிழமை தோறும் சுந்தரகாண்டம் பாராயணம் செய்து வருவது சிறப்பான பலனை தரும். அல்லது விஷ்ணு சரசுநாமத்தை பாராயணம் செய்யலாம். அதேசமயம் குலத்தெய்வ வழிபாடு செய்வதும் யோக பலன்களை கொடுக்கும்.
✦ மேஷம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ ரிஷபம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ மிதுனம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ கடகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ சிம்மம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ கன்னி குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ துலாம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ விருச்சிகம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ தனுசு குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ மகரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
✦ கும்பம் குரு பெயர்ச்சி பலன்கள் 2023 to 2024
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…