Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சபரிமலை மண்டல பூஜை; இன்று தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு! 

KANIMOZHI Updated:
சபரிமலை மண்டல பூஜை; இன்று தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு! Representative Image.

சபரிமலை மண்டல பூஜை நிறைவு நாளில் ஐயப்பனுக்கு சாத்த தங்க அங்கி ஆரம்முழா பார்த்தசாரதி கோவில் இருந்து இன்று அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட உள்ளது.

.மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த வருடம் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியதால் நெரிசலை தவிர்க்க பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சபரிமலை மண்டல பூஜை 41 வது நாளை முன்னிட்டு தேவசம்போர்டு அதிகாரிகள் நடத்திய கற்பூர ஆரத்தி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது

 மண்டல கால பூஜை நிறைவை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு சார்ந்த தங்க அங்கி, பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று காலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை சபரிமலை சன்னிதானம் கொண்டு செல்லப்படும் தங்க அங்கியானது ஐயப்பனுக்கு சாத்தப்பட்ட பிறகு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் அதன் பிறகு 27ஆம் தேதி மண்டல பூஜை முடிந்து நடை சாத்தப்படும் 

கடந்த 41 நாட்களில் சுமார் 30 லட்சம் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். சபரிமலை மண்டல 41 வது நாள் நிறைவின் ஒரு பகுதியாக சன்னிதானத்தில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் நடத்திய கற்பூர ஆராத்தி திருவீதி உலா கேரள பாரம்பரிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. 

தீபாராதனைக்கு பின் கொடிமரம் முன் இருந்து கோயில் தந்திரி கண்டர் ராஜீவர் கற்பூர ஆராத்தி காட்டிய பின்பு , அய்யப்பன் புலி மீது எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி, மாளிகப்புரம் கோயில் வழியாக நடைபாதையை அடைந்து 18 ஆம் படி முன் நிறைவடைந்தது.  மணிகண்டன், பந்தளராஜா, வாவர் சுவாமி, பரமசிவன், பார்வதி, சுப்பிரமணியர், கணபதி, மகிஷி, கருடன் போன்ற தெய்வங்கள் மேடம் அணிந்து செண்டை மேளம் முழங்க நடைபெற்ற திருவீதி உலா சன்னிதானத்தை பக்தி மையமாக மாற்றியது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்