Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode Nattatreswaran Temple: சோழனின் படைப்பில் காவிரி ஆற்றில் நடுவில் சிவ ஆலயம்..! செல்வது எப்படி…?

Manoj Krishnamoorthi August 04, 2022 & 11:30 [IST]
Erode Nattatreswaran Temple: சோழனின் படைப்பில் காவிரி ஆற்றில் நடுவில் சிவ ஆலயம்..! செல்வது எப்படி…?Representative Image.

 சிவமே அன்பு என்பதும் அன்பே சிவம் என்பதும் மனிதன் அவரின்பால் கொண்ட கருத்தின் வெளிப்பாடாகும், இறைவன் இருக்கிறான் இல்லை என்னும் விவாதம் கோழியிலிருந்து முட்டை வந்ததா.... இல்லை முட்டையிலிருந்து கோழி வந்ததா... என்னும் கேள்விக்கு பதிலைப் போல் நீண்டு கொண்டுதான் இருக்கும். இருப்பினும் கடவுள் என்பது தீய எண்ணங்களைக் கடந்து அகத்தை தூய்மைப்படுத்தும் வழிமுறையின் ஒன்றாகும். நம் வாழ்வை சீராக்கும் எந்தவொரு நல்ல விஷயமும் நமக்கு கடவுளாகக் காட்சி அளிக்கும், அந்த வகையில் கடவுள் என்பது மன அமைதி தரக்கூடிய அமைதியான சூழல் கொண்ட இடமும் ஆகும். 

உங்களுக்கு அப்படி ஒரு இடம் ஈரோட்டில் உள்ளது என்பது தெரியுமா...! அதுவும் இந்த இடம் சோழர்களால் உருவாக்கப்பட்ட இடம் என்பது நம்பமுடிகிறதா... ஆம், நம் ஈரோட்டில்  அமைதி சூழல் நிறைந்த நாம் நினைத்து பார்க்க முடியாத அளவு பிரம்மாண்டமான சோழர்களின் படைப்பு உள்ளது. இதைப் பற்றி அறிய எங்கள் பதிவு உதவிக்கரமாக இருக்கும்.

நட்டாற்றீஸ்வரர் கோவில் ( Erode Nattatreswaran Temple)

காவிரி ஆற்றின் ஓடு பாதையின் நடுவில் பாறை குன்றில் அமைந்த சிவ ஆலயமான நட்டாற்றீஸ்வரர் கோயில் தான் 10 நூற்றாண்டில் சோழர்களால் நிறுவப்பட்ட கோயில்  ஆகும். 3000 வருடம் பழமையான இந்த கோவிலின் அத்தி மரம் மிகவும் சிறப்பாகும்,  திருமண தடை நீங்க இந்த சிவனை வணங்குவது உகந்ததாகும். ஏனெனில் சிவ பெருமான் மணக்கோலம் கொண்டு இமய மலையில் கட்சியருள....அனைவரும்ஈசனைக் காண இமயத்தில் இருந்தமையால் வடப்புறம் தாழ்ந்திருக்கத் தென்புறம் உயரந்தது.

  

இதை சமப்படுத்த சிவனின் உத்தரவில் அகத்திய முனிவர் பயணிக்க உருவானதாகக் கதைகள் உள்ளது. வருடப் பிறப்பின் முதல் நாளான சித்திரை முதல் நாள் இந்த கோவிலில் விழாக்கோலம் கொண்டு இருக்கும், இந்த தினத்தில் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யம் பிரபலமாகும். சிவனிற்குப் படைத்த பிரசாதமாக  வருடப்பிறப்பின் முதல் நாள் கம்பங்கூழ் வழங்கப்படும், மேலும் பக்தர்கள் மழையில் சிவனை காண்பது அரியதாகும்.

எப்படி செல்வது? (How To Go Erode Nattatreeswarar Temple In Tamil)

இந்த கோவில் ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி வழியாகக் கரூர் செல்லும் வழியில் காங்கேயம்பாளையம் என்னும் ஊரில் இருபுறமும் காவிரி  அன்னை சூழ ஆற்றின்  நடுவில் அமைந்துள்ளது. இந்த திருத்தலத்திற்கு செல்ல ஈரோடு பேருந்து நிலைத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்து வழியாக சாவடிப்பாளையம் என்னும் ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து சுமார் 2 கீ.மீ கிழக்கு திசையில் பயணித்தால் கங்கேயம்பாளையம் அடையலாம். 

காவிரி ஆற்றின் கரையிலிருந்து ஆலயம் சென்று ஈசனை தரிசிக்க பெரும்பாலும் பரிசல் பயணம் தான் பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பக்தர்கள் ஈசனைக் காண ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது.  

இரயில் வழி பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஈரோடு மாவட்ட ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் ரயிலில் சாவடிபாளையம் நிலையம் வந்து அங்கிருந்து  3 கீ.மீ பயணத்திதால் கோவிலை அடையலாம்.   

சித்திரை 1 ஆம் நாள் பெரும்பாலும் இந்த கோவில் செல்ல ஏராளமான ஆட்டோ வசதிகள் ஏற்பாடு செய்யப்படும். ஆனால் மற்ற நாட்களில் நாம் தனியாக ஆட்டோ அல்லது காரில் தான் செல்ல வேண்டும். 

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 

Tag: Erode Nattatreswaran Temple | Erode Nattatreeswarar Temple Povathu Eppadi | How To Go Erode Nattatreeswarar Temple In Tamil | Erode Nattatreswaran Temple Location | நட்டாற்றீஸ்வரர் கோவில் | Chola Temple In Erode District | Natadreeswarar Temple Route From Erode | Erode To Natadreeswarar Temple | Erode Nattatreeswarar Temple Povathu | Erode To Kangayampalayam Distance | Erode Nattatreeswarar Temple Sellum Vazhi | Chola Temple In Erode

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்