Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூடுதுறையில் எந்த நாளும் இல்லாத சிறப்பு… இந்த ஆடிப்பெருக்கு அன்று கட்டாயம் செய்திடுங்கள்…

Gowthami Subramani [IST]
கூடுதுறையில் எந்த நாளும் இல்லாத சிறப்பு… இந்த ஆடிப்பெருக்கு அன்று கட்டாயம் செய்திடுங்கள்…Representative Image.

மூன்று நதிகள் கூடும் இடம் முக்கூடல் என்று அழைப்பர். பவானி, காவிரி, மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என கூறப்படும் மூன்று நதிகளும் கூடும் இடம் முக்கூடல் என அழைக்கப்படுகிறது. இந்த முக்கூடல் சேரும் இந்த இடத்தை கூடுதுறை என அழைப்பர். இது திரிவேணி சங்கமம் எனவும் அழைக்கப்படுகிறது. காவிரி அன்னையை மதிக்கும் இந்த இடத்தில் தான் பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

பவானி கூடுதுறை சிறப்பு

பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் என்றாலே தனிச்சிறப்பு உண்டு. இந்த கோவிலுக்கு ஏராளக்கணக்கானோர் வந்து நதியில் புனித நீராடி வணங்கிச் செல்வது வழக்கம். மேலும், அமாவாசை தினத்தன்று நம் முன்னோர்களை வணங்கி பிண்டங்களை படைத்து பூஜையிட்டு, நதியில் நீராடி பின்னர் பிண்டங்களைக் ஆற்றில் கரைப்பது வழக்கம். இதன் மூலம், நமக்கு முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடிப்பெருக்கில்

ஆடிப்பெருக்கு அன்று காவிரி நதியில் குளிப்பதற்கு ஒரு வரலாறே உள்ளது. அந்த காலத்தில் முனிவர்கள் நதியின் அடியில் உள்ள 18 ஸ்தலங்களில் தவம் செய்து கொண்டிருந்தனராம். இந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று தான், அவர்கள் தவத்தை விட்டு, மேலே வந்து நதிக்கரையில் புனித நீராடி காவிரி அன்னையாரை வணங்கினர். இதனால், இந்த ஆடிப்பெருக்கு தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாமும் அந்த நதியில் புனித நீராடினால் நம்முடைய அனைத்து பாவங்களும் விலகி, முனிவர்கள் செய்த தவத்தின் பலன்கள் நமக்குக் கிடைக்கும் என்று கூறுவர்.

வழிபாடும் செய்யும் முறை

இந்த தினத்தன்று கூடுதுறை காவிரி நதிக்கரைக்குச் சென்று புனித நீராடி, சங்கமேஸ்வரரை வழிபட்டால், எல்லா விதமான நல்ல பயன்களும் கிடைக்கும். சாதாரண நாள்களில் வழிபடும் போது, யாதொரு தீங்கும் நேராது என கூறுவர். அப்படி இருக்கும் போது, இந்த சிறப்பான நாளில் இத்திருத்தலத்திற்குச் சென்று காவிரி அன்னையை வழிபட்டால், எல்லா துன்பங்களும் நீங்கி, கஷ்டங்கள் துலைந்து நற்பலன்கள் கிடைக்கும்.

தீராத நோய்களும் தீரும்

இந்த திருத்தலத்தில் உள்ள முருகப்பெருமானை அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இந்த தலத்திற்கு திருஞானசம்பந்தர் வருகை தந்த சமயத்தில், அடியார்களுக்கு பிடித்திருந்த சுரநோய் நீங்க ஜீரஹரேஸ்வரரை வழிபட்டதன் மூலம், நோய் நீங்கப் பெற்றார்கள் என்று வரலாறு கூறுகிறது. மேலும், இந்த தலத்திற்கு பத்மகிரி என்ற பெயரும் உள்ளது.

குபேரன் தவம் செய்த இடம்

புனித தலமான இந்த தலத்தில், இறைவனின் தரிசனம் வேண்டி பவானியில் தவம் மேற்கொண்டார் எனவும் ஆன்மீக வரலாறு கூறுகிறது. குபேரன் செய்த தவத்தால் மகிழ்ந்த சிவன் மற்றும் திருமால் அவருக்குக் காட்சி அளித்துள்ளனர். இந்தத் திருத்தளத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து அவர்களைக் காக்க வேண்டும் என்று குபேரன் வரம் பெற்றுள்ளார். இதனால், இத்திருத்தலம் தட்சிண அளகை எனவும் அழைக்கப்படுகிறது.

இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் நடந்த இந்தத் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, ஆடிப்பெருக்கு அன்று இந்தத் திருத்தலத்திற்குச் சென்றால், தீராத நோய்கள் தீர்ந்து விடும் எனவும், வீட்டில் இருந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி செல்வம் பெருகும் எனவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்