Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

11 Face Murugan God: 11 தலைகளையும், 22 கரங்களையும் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி தரும் முருகப் பெருமான்….!

Gowthami Subramani May 24, 2022 & 07:07 [IST]
11 Face Murugan God: 11 தலைகளையும், 22 கரங்களையும் கொண்டு பக்தர்களுக்குக் காட்சி தரும் முருகப் பெருமான்….!Representative Image.

11 Face Murugan God: ஆறுமுகன் எனப் போற்றப்படும் முருகப்பெருமான், 11 முகத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு மிகுந்த பலன்களை அளிக்கிறார். முருகப் பெருமானுக்காக ஏராளமான ஆலயங்கள் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. இவரது சிறப்பைப் போற்றும் வகையில், மலேசியாவில் இவரது சிலை நிறுவி, இன்று வரை உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வழிபடுகின்றனர்.

கோவிலின் சிறப்பு

இவரை ஆறுமுகன் என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர். ஆனால், இவரின் சிறப்பைப் போற்றும் வகையில், இவர் 11 முகங்களுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். ராமநாதபுரம் பகுதியில் உள்ள குண்டுக்கரை என்ற ஊரில், சுவாமிநாத சுவாமி என்ற திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமான் 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில், அருள்பாலிக்கிறார்.

காரணம்

இந்த திருத்தலத்தில் முருகப்பெருமான் 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் காட்சி தருவது மிகச் சிறப்பாகக் கருதப்படுகிறது. அசுரனான சூரபத்மனை வதம் செய்த பின், ஸ்ரீ முருகப்பெருமான் இந்த தரிசனத்தில், இத்தலத்திற்கு வந்து தங்கியதால் இவ்வாறு அருள்பாலிக்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன. மேலும், முருகப்பெருமானின் இந்த விஸ்வரூப தரிசனம் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துமாறு அமைந்துள்ளது.

வரலாறு

300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்து வந்தார். இவர், தினசரி காலை வேளையில், குண்டுக்கரைக்குச் சென்று, சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஒரு நாள் இவர் கனவில் தோன்றிய முருகப்பெருமான். குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை, எடுத்து விட்டு, புதிதாக ஒரு சிலையை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு கூறியுள்ளார். மேலும், இதனால், இந்தப் பகுதி மக்களுக்கு நன்மைகள் விளையும் என்றும் கூறியுள்ளார். அதன் படியே, இந்த சுவாமிநாத சுவாமி திருக்கோவிலில், முருகப் பெருமான் தோன்றியதற்குக் காரணமாக அமைந்தது.

வழிபாடு

இந்த கோவிலின் சிறப்பு வழிபாடாக, ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதத்தின் முதல் தேதியில், பூச்சொரிதல் விழா நடைபெறும். மேலும், இந்த கோவிலின் சிறப்பம்சமாக, துர்க்கை அம்மனுக்கும் பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டு, 18 கரங்களுடன் 7 அடி உயரத்தில் காட்சி தருகிறார். மேலும், துர்க்கை அம்மனைப் போற்றும் வகையில், நவராத்தி சிறப்பான ஒன்பது நாள்களுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வழிபாட்டைக் காண ஏராளக்கணக்கான மக்கள் படையெடுத்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி விசாகத்தை ஒட்டி, பிரம்மாண்டமான பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. திருக்கார்த்திகை, தைப்பூசம், சூரசம்ஹாரம், மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. நம் எல்லோருக்கும் தெரிந்தது, முருகப்பெருமானின் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெறும் என்பது தான். இதற்கு அடுத்த நிலையில், சூரசம்ஹாரம் நடைபெறும் இடங்களில் இந்த ஆலயமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆலயத்தில் முருகப்பெருமானை வழிபாடு செய்து வந்தால், கல்வியில் சிறந்து விளங்குவர் என்று கூறுவர். மேலும், இந்தக் கோவிலில் நேர்த்திக் கடன் வைத்து அதனைச் செய்து வேண்டுவர், மிகச் சிறந்த பலன்களைப் பெறுவர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்