Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Tanjore Temple Facts: நிழலில்லா ஆலயத்தின் அரிதானா உண்மைகள்...! 

Manoj Krishnamoorthi May 23, 2022 & 10:10 [IST]
Tanjore Temple Facts: நிழலில்லா ஆலயத்தின் அரிதானா உண்மைகள்...! Representative Image.

மொழி வல்லமையிலும் சிற்பக்கலையிலும் சிறந்து விளங்கும் தமிழரின் தொன்றுதொட்ட பண்பாடு மண்ணுலகம் முழுவதும் பெருமை பேசும் வண்ணம் உலகில் மிகப்பெரிய கடற்படையைக் கொண்ட சோழனின் தலைமையில் படைக்கப்பட்ட காலத்தால் அழிக்க முடியாத வண்ணம் கம்பீரமாக நிற்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் பற்றி அறியா உண்மைகளைத் தெளிவுபடுத்த (Thanjavur Temple Facts in Tamil) எங்கள் பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

கட்டிடச் சிறப்பு

கோபுர விமானத்தின் நிழல் மண்படா வண்ணம் நிழலில்லா கட்டிடக்கலையின் அதிசயம் இன்றும் பெருமை பேசும் சோழனின் புகழை, ஆதி சிவனை மூலவராகக் கொண்ட திருக்கோவில் பெரிய கோவில் என்றும் அழைக்கப்படும்.  ராணுவம், சிறப்பான அரசாட்சி, கலை ஆர்வம் போன்றவையில் சிறந்து விளங்கிய ராஜ ராஜ சோழனின் புகழ் அழியாப் புகழாக இருக்கும் காரணம்  தஞ்சை பெருவுடையார் கோயிலாகும்.

சுமார் 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பல ஆக்கிரமிப்புகளான மராட்டியம், ஆங்கிலேயம் போன்ற அனைத்தும் கடந்து நிற்பதும் ஒரு அதிசயமே ஆகும்.  

ரகசிய பாதை

ராஜ தந்திரத்தில் சிறந்து விளங்கிய மன்னன் ராஜ ராஜ சோழன் கோயிலை உருவாக்கிய போதே அடித்தளத்தில் ரகசிய பாதையை உருவாக்கினார். இந்த ரகசிய பாதை அவர் உருவாக்கிய அனைத்து கோயிலுடன் சேர்வதும் ஒரு சிறப்பே ஆகும். மேலும், தன் அரண்மனையிலிருந்து பெரிய கோயிலுக்கு ரகசிய பாதை வைத்திருந்ததாகச் செவி வழிச் செய்திகளும் வருகிறது. 

அதிகம் படிப்பவை: Peace Of Mind Meditation | இதுதான் ஆன்மீகமா ! ஆன்மீக முறை இவ்வளவு எளியதா!

சிறப்பக் கலை 

நவீன இயந்திரம் இருக்கும் இன்றைய காலத்தில் கல்லை உடைக்க பலவித முயற்சிகள் எடுக்கப்படும் சூழலில் 11 நூற்றாண்டில் பாறைகளைப் பிளந்து சிற்பங்களை அமைத்ததும் அதிசயமே ஆகும். பெரிய பாறைகளை உடைக்க சிறுத்துளையிட்டு தண்ணீர் ஊற்றி உடைத்தாக நம்பப்படுகிறது.

சிவ ஆலயம் கட்டுவது பாக்கியமே என உணர்ந்த சோழன் தன் ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற சிவ ஆலயம் திறந்ததாலும், நடனக் கலையின் சிறப்பை வெளிப்படுத்தும் வண்ணம் பரத நாட்டியத்தில் (81,001 கரணங்கள்) கை மற்றும் கால்களின் அசைவுகளைக் காட்டும் நடனக் கலைஞர்களின் பல்வேறு சித்தரிப்புகள் கோயிலில் செதுக்கப்பட்டுள்ளது அதிசயமாகும்

இதுபோன்ற செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்