Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி அமாவாசை..! இன்னைக்கு இப்படி விரதம் இருந்து பாருங்க.. எல்லா பிரச்சனையும் விலகுமாம்…

Gowthami Subramani July 28, 2022 & 06:50 [IST]
ஆடி அமாவாசை..! இன்னைக்கு இப்படி விரதம் இருந்து பாருங்க.. எல்லா பிரச்சனையும் விலகுமாம்…Representative Image.

Aadi Amavasai Nalla Neram 2022: ஆடி அமாவாசை என்றாலே ஒரு தனிச்சிறப்பு தான். அமாவாசை என்றாலே சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் நாளாகக் கருதப்படும். ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை இரண்டும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபடுவது மிகச் சிறப்பு ஆகும்.

ஆடி அமாவாசையின் சிறப்புகள்

ஆடி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு விரதம் இருந்து தர்ப்பணம் செய்து வழிபடுவதன் மூலம் தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும். சாபங்கள் நீங்கும் எனவும் கூறுவர். ஆடி அமாவாசை தினத்தன்று தான் முன்னோர்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று கூறுவர். எனவே, இத்தினத்தில் அவர்களை வழிபட்டு ஆசி பெறுவது மிகச் சிறப்பாகும்.

தர்ப்பணம் கொடுக்கும் முறை

தர்ப்பணம் என்பது இறந்தவர்களுக்கு, நீர் நிலைகளுக்கு அருகில், அவர்களை வழிபடுவதாகும். அமாவாசை நாளில் ஆறு, கடல், குளம் உள்ளிட்ட இடங்களில் தர்ப்பணம் செய்ய கூட்டம் அலை மோதும். இவ்வாறு நீர் நிலைகளுக்குச் சென்று தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வீட்டில் புரோகிதரை அழைத்து தர்ப்பண்ம செய்யலாம். தர்ப்பணை செய்ய இயலாதவர்கள், உணவு சமைத்து அன்னதான வழங்கி வழிபடலாம்.

நல்ல நேரம்

ஆடி அமாவாசை தினமான இன்று தர்ப்பணம் கொடுப்பதற்கான நல்ல நேரத்தைப் பார்ப்போம்.

ஆடி மாதத்தில் ஜூலை 27 ஆம் நாள் இரவு 10.06 மணிக்கு அமாவாசை தொடங்கியது. ஆடி அமாவாசை தினமான இன்று அதாவது ஜூலை 28 ஆம் நாள் வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை எந்த நேரம் வேண்டுமானாலும், நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்யலாம்.

இன்றைய நாளின் நல்ல நேரம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

ராகுகாலம் – பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை

குளிகை காலம் – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை

எமகண்டம் – காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்