Tue ,Apr 30, 2024

சென்செக்ஸ் 74,668.04
937.88sensex(1.27%)
நிஃப்டி22,643.40
223.45sensex(1.00%)
USD
81.57
Exclusive

ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட உகந்த நேரம் எது? | Aadi Krithigai 2023 Date and Timing

Nandhinipriya Ganeshan Updated:
ஆடி கிருத்திகையில் முருகனை வழிபட உகந்த நேரம் எது? | Aadi Krithigai 2023 Date and TimingRepresentative Image.

அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தெய்வங்களையும் வழிபட மிகவும் அற்புதமான மாதம் தான் இந்த ஆடி மாதம். அப்படி இந்த மாதத்தில் வரும் சிறப்பான நாட்களில் ஒன்று 'ஆடி கிருத்திகை'. 27 நட்சத்திரங்களில் 3வது நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம் என்பதால், அந்த நாள் மிகவும் முருகப் பெருமானை வழிபாடு செய்ய உகந்த நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும் கார்த்திகை, தை, மற்றும் ஆடி ஆகிய மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

அந்தவகையில், ஆடி கிருத்திகை நாளில் முருகப் பெருமானை வழிபாடு செய்வதால் செவ்வாய் தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும், கடன் பிரச்சனைகளும் விலகும். நீண்ட நாட்களாக திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடி வரும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் இந்த ஆண்டு எப்போது வருகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

ஆடி கிருத்திகை 2023 எப்போது?

இந்த வருடம் ஆடி கிருத்திகை ஆகஸ்ட் 9 ஆம் தேதி (புதன்கிழமை) வருகிறது. அன்றைய தினம் காலை 07.33 மணிக்கு தொடங்கி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 07.44 மணிக்கு முடிவடைகிறது. மேலும், காலை 09.15 முதல் 10.15 வரை நல்ல நேரம் என்பதால் புதன்கிழமை காலை 9 மணியிலிருந்து 11 வரை முருகப் பெருமானுக்கு பூஜை செய்து வழிபாடு செய்யலாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்