Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி பௌர்ணமி 2023 சிறப்புக்கள் மற்றும் இந்நாளில் செய்ய வேண்டியவை | Aadi Pournami 2023 Date and Timing

Priyanka Hochumin Updated:
ஆடி பௌர்ணமி 2023 சிறப்புக்கள் மற்றும் இந்நாளில் செய்ய வேண்டியவை | Aadi Pournami 2023 Date and TimingRepresentative Image.

ஆடி பவுர்ணமி 2023: சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சாரம் செய்யக்கூடிய காலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மாதங்கள் பின்பற்றப்படுகிறது. அதில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கக்கூடிய தமிழ் மாதம் ஆடி. இந்த ஆடி மாதம் இறைவனை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த மாதமாகும். அதிலும் ஆடி பௌர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அன்று நாம் செய்ய வேண்டிய வழிமுறை என்ன என்று விரிவாக பாப்போம்.

ஆடி பௌர்ணமி தேதி & நேரம்:  ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 3.26 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 2 ஆம் தேதி காலை 1.05 மணி வரை இருக்கும்.

ஆகஸ்ட் முதல் நாளில் வரும் ஆடி பௌர்ணமியானது ஆடி செவ்வாய் கிழமையில் வருகிறது. அன்றைய தினத்தில் கூடுதல் சிறப்பாக ஆடித்தபசு-வும் வருகிறது. ஆடித்தபசு என்றால் என்ன? சங்கன் மற்றும் பதுமன் ஆகிய நாக அரசர்கள் சிவன் மற்றும் விஷ்ணு இருவரும் தான் உண்மையான தெய்வம் என்று அம்பிகையிடம் முறையிட்டனர். பின்னர் சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்பதை அவர்களுக்கு புரிய வைக்க பார்வதி தேவி பூலோகத்திற்கு வந்தார். அங்குள்ள புன்னை வனத்தில் சிவனும், விஷ்ணுவும் ஒன்றாக இணைந்து சங்கரநாராயணனாக காட்சியளிக்க வேண்டும் என்று ஒற்றைக்காலில் ஊசி முனையில் நின்று கடுமையாக தவம் செய்தார். இதனால் பார்வதி தேவிக்கு கோமதி என்ற பெயர் அளிக்கப்பட்டது. அவரின் விருப்பத்தை நிறைவேற்ற சிவனும், விஷ்ணுவும் சங்கரநாராயணன் போல் காட்சியளித்தனர். தவம் என்ற சொல்லை தபஸ் என்று கூறுவார்கள். அதுவே பேச்சு வழக்கில் தவசு அல்லது தபசு என்று மறுவிவிட்டது.

எனவே, இந்நாளில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வழிபடுவது சகல சௌவ்பாக்கியத்தையும் கொடுக்கும். மேலும் அன்றைய தினத்தில் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுவது வழக்கம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்