Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி பெருக்கு வழிபடுவதற்கான காரணம்… இந்த முறைப்படி வழிபட்டால் எல்லா பலன்களும் கிடைக்கும்…!

Gowthami Subramani August 02, 2022 & 10:20 [IST]
ஆடி பெருக்கு வழிபடுவதற்கான காரணம்… இந்த முறைப்படி வழிபட்டால் எல்லா பலன்களும் கிடைக்கும்…!Representative Image.

ஆடி மாதம் என்றாலே திருவிழாக் கோலங்கள் தான். ஆடி மாதத்திற்கென ஒரு தனிச்சிறப்பே உள்ளது. ஆடி மாதத்தில் காவிரி தாயை வணங்குவது சிறப்பு.

ஆடி பெருக்கு வரலாறு

வரலாற்றின் படி, உயர்ந்த முனிவர்கள் காவிரி கரையோரங்களில் இருக்கும் முக்கியமான 18 தலங்களில் பூமிக்கு அடியில் பிருத்வியோகம் செய்வார்கள். இவர்களின் நீண்ட காலத் தவத்தின் பயனாக, யோகத்தை விட்டு காவிரி ஆற்றில் வந்து புனித நீராடுவார்கள். இவர்களின் புண்ணிய பலன்கள், மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் இவ்வாறு செய்திருக்கின்றனர். புண்ணிய பலன்களைப் பெறுவதற்கான இந்த நன்னாள் ஆடி பெருக்கு என்று கூறப்படுகிறது.

காவிரி நதிக் கரையோரங்களில் இருக்கும் இந்த 18 இடங்களில் புனித நீராடி வணங்குவதன் காரணமாக, இந்த நன்னாளில் மக்களும் காவிரி நதியில் புனித நீராடுவதால் ஒரு சிறப்பான பலனைப் பெறுகின்றனர். காவிரித் தாயை வணங்குவதற்கு ஏராளக்கணக்கான மக்கள் காவிரி நதியில் கூடி வழிபடுவர்.

ஆன்மீக வழிபாடும் மட்டுமல்லாமல், நீர் நிலைகளையும், இயற்கையையும் வணங்குவதை மறக்காமல் இருப்பதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது.


Aadi 18 Reasons : ஆடிப்பெருக்கு விழா கொண்டாட இப்படி ஒரு காரணமா….!


அறிவியல் ரீதியாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுவதற்குக் காரணம்

ஆன்மீக வழிபாட்டைத் தாண்டி சில அறிவியல் ரீதியாகவும், கூறப்படுகிறது. இந்த மாதத்தில் விதைக்கப்படும் விதைகள் மிக சிறப்பாக வளரும். இதற்கு சூரியனியிலிருந்து தோன்றும் சக்தி நிறைந்த கதிர்களே காரணமாகும். ஆடி மாதத்தில், விதைகளுக்கு ஒரு வித புத்துணர்ச்சி கிடைப்பதுடன், வலிமையும் பெறப்படுகிறது.

வழிபடும் முறை

இந்த சிறப்பான நாளில் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடி இறைவனை வணங்க வேண்டும்.

குறிப்பாக, காவிரி ஆற்றை தெய்வமாக வணங்கி நீராடி வழிபடுவர்.

இதன் மூலம், பயிர்களுக்குத் தேவையான நீர் வளம் நன்றாக இருக்கும். வெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி, காவிரி அன்னையை வணங்குவதன் மூலம் பெண்களுக்கு நல்ல கணவன் அமையும் என கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்