Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Garuda Panchami Mantra : இந்த மந்திரத்தை கருட பஞ்சமி தினத்தில் சொன்னால் எண்ணற்ற நன்மைகளா….! 

Manoj Krishnamoorthi August 01, 2022 & 18:00 [IST]
Garuda Panchami Mantra : இந்த மந்திரத்தை கருட பஞ்சமி தினத்தில் சொன்னால் எண்ணற்ற நன்மைகளா….! Representative Image.

பொதுவாக ஆடி மாதம் என்றாலே மகத்துவம் வாய்ந்த மாதம் தான், கோயில்களில் விழா மற்றும் வீட்டில் விரதம் என எப்போதும் விழாக் கோலம் தான் இருக்கும். மும்மூர்த்திகளில் ஒருவான காக்கும் தெய்வம் விஷ்ணு அவர்களின் வாகனமான கருட பகவானின் சிறப்பான நாளான கருட பஞ்சமி தினத்தில் நாம் கருடனை வழிபாடு செய்வதால் அடையும் பலன் பற்றி காண்போம்.

கருட பஞ்சமி (Garuda Panchami 2022 In Tamil)

ஒவ்வொரு வருடமும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி கருட பஞ்சமி ஆகும். இந்த தினத்தில் பெருமாள் வழிபாடும் கருட பகவான் வழிபாடும் பிரபலமாகும். இன்றைய தினம் கருட பகவான் சன்னதி அல்லது பெருமாள் சன்னதி செல்வதால் முஞென்ம பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை ஆகும். இந்த தினத்தின் வழிபாடு உடன் பிறந்த இரத்த சொந்தத்தின் நலனை மேம்படுத்தும் சிறப்பான நாளாகும்.

கருட பஞ்சமி மகத்துவம் (Garuda Kavacham Benefits)

பொதுவாக இந்த கருட பஞ்சமி நமக்கு பிரபலமான விஷேசமில்லை, ஆனால் ஆயுளைக் கூட்டும் சக்தி இந்த கருட பஞ்சமி உண்டு என்று முன்னோர்கள் கூறுவதும் உண்டு. கருட பஞ்சமி தினத்தில் அதிகாலையில் எழுந்து பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு எலுமிச்சம்பழத்தை நறுக்கி ஒன்றில் மஞ்சள் மற்றொன்றில் குங்குமம் தடவி  வீட்டின் வாசலில் வைக்கவும் , அல்லது வீட்டில் நுழைவு கதவின் அருகே மஞ்சள் குங்குமம் தடவி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வது நம் வீட்டை துரத்தும் கெட்ட சக்திகளைப் போக்கும்.

கருட மந்திரம் (Garuda Panchami Mantra)

இந்த தினத்தில் உங்கள் வழக்கமான வேலை ஆரம்பிக்கும் முன் பூஜை அறையில் அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும். 

ஓம் தத்புருஷாய வித்மஹே

ஸ்வர்ண பக்ஷாய தீமஹி 

தன்னோ கருட ப்ரசோதயாத் 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்