Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

திருப்பாவை பாடல் 27: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! [பாடலும் விளக்கமும்] | Margali Special

Nandhinipriya Ganeshan Updated:
திருப்பாவை பாடல் 27: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! [பாடலும் விளக்கமும்] | Margali Special Representative Image.

ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பாடல்கள் ஆண்டாள் பாசுரம் என்றும் வழங்கப்படும். இந்த திருப்பாவை பாடல்கள் அனைவராலும் மார்கழி மாதத்தில் தினமும் பாடப்படும் முக்கிய பாடல்களாகும். அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும். அந்தவகையில், மார்கழி மாதத்தின் 27வது நாள் பாடவேண்டிய திருப்பாவை பாடல். 

திருப்பாவை பாடல் 27:

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

திருப்பாவை பாடல் 27: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! [பாடலும் விளக்கமும்] | Margali Special Representative Image

பொருள்:

நோன்பு இருக்கும் நாங்கள், சன்மானம் பெற்று மகிழுமாறு அருள் புரிய வேண்டும் - என வேண்டும் பாடல் இது. எதிரிகளை வெல்கின்ற குணங்களை உடைய கோவிந்தனே! உன்னைப் பாடி, உன்னிடம் நாங்கள் வேண்டுகின்ற பறையைப் பெற்று, அதன் பின்னும் நாங்கள் பெறும் சன்மானம் என்ன தெரியுமா?
 
உலகத்தில் உள்ளோர் புகழும் படியாக, கையில் அணியும் ஆபரணங்கள், தோளில் அணியும் பரணங்கள், காதில் அணியும் தோடு, காதை மேலும் அலங்காரம் செய்யும் ஆபரணங்கள், காலில் அணியும் ஆபரணங்கள் என்று சொல்லப்படும் பலவகையான ஆபரணங்களை எங்களுக்கு கொடு. அதன் பிறகு, பால் சோறு மறையும்படியாக நெய்யை ஊற்றி, அது முழங்கையில் வழியும்படியாக உண்டு, நீயும் நாங்களுமாகக் கூடி இருந்து குளிர வேண்டும்.

திருப்பாவை பாடல் 27: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! [பாடலும் விளக்கமும்] | Margali Special Representative Image

விளக்கம்:

பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். அப்போது, அக்கார அடிசில் எனப்படும் உணவு மிகவும் விஷேசம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுவார்கள்.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.

திருப்பாவை பாடல் 27: கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! [பாடலும் விளக்கமும்] | Margali Special Representative Image

மார்கழி மாதத்தில் திருப்பாவை பாட வேண்டிய காலம்:

மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள் எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவை பாடலை தினமும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும். 

இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்