Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in TamilRepresentative Image.

மாசி மகம் என்றாலே நம்மில் பலருக்கும் மனதிற்கு எட்டுவது கும்பகோணம் மாசி திருவிழா தான். அப்படி அங்கு மட்டும் ஏன் அவ்வளவு சிறப்பு தெரியுமா? வாங்க தெரிந்துக் கொள்வோம்.

கும்பகோணம் பெயர்க்காரணம்:

உலகத்தில் இருக்கும் உயிர்களை உருவாக்கும் விதைகளை அமிர்தம் நிறைந்த குடத்தில் போட்டு வைத்திருந்தார் பிரம்மா. வேடனாக வேஷம் பூண்டு வந்த சிவன், அம்பு கொண்டு அக்குடத்தை சாய்த்து அதிலிருந்து உயிர்களை உருவாக வைத்தாராம். குடமான கும்பத்தை, சிவன் தன் அம்பால் சேதமாக்கி வைத்த இடம் என்பதாலே இது கும்பகோணம் என்று அழைக்கப்பெறுகிறது. பிரம்மன் வைத்திருந்த அந்த குடத்தில் இருந்து விழுந்த ஒரு துளி அமிர்தமே இங்கு குளமாகி பாவம் போக்கி வருவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன. 

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in TamilRepresentative Image

மாசி மக நாளில் பல பாகங்களிலிருந்தும் திரளான மக்கள் திரண்டு மகாமகக் குளத்தில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்வார்கள். காசியில் பிறந்தவர்கள் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போதும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆம் இந்த குளத்திற்கு அவ்வளவு சிறப்புண்டு. 

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in TamilRepresentative Image

மகாமகம் குளத்தின் சிறப்பு:

அக்காலத்திருந்தே பாவங்கள் கரைய அனைவரும் புனித நதிகளில் நீராடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் புண்ணிய நதியாக கருதப்படும் கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவேரி, சிந்து, கோதாவரி, தாமிரபரணி, கோதாவரி, சரயூ, பொருநை போன்றவைகளில் கூட பாவங்கள் அதிகமாக சேர்ந்த வண்ணம் இருந்தனவாம். 

மனிதர்களின் பாவங்களை போக்கும் நதிகளின் பாவங்கள் தீர உபகாரம் செய்ய வேண்டும் என சிவ பெருமானிடம் அந்நதிகள் வேண்டினவாம். அப்போது மனமுருகிய சிவ பெருமான், கும்பகோணத்தில் இருக்கும் தீர்த்தத்தில் குரு, சிம்ம ராசியில் இருக்கும் மக நட்சத்திரமும் பெளர்ணமியும் ஒன்றாக இணையும் நன்நாளில் முறைப்படி நீராடினால் பாவங்கள் தீரும் என கூறினாராம். 

சிறப்பு வாய்ந்த கும்பகோணம் மாசி மகம்.. | Masi Magam Kumbakonam Mahamaham History in TamilRepresentative Image

அதனால் தான், மாசிமகத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும், கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, கோதாவரி, சரயூ, பொருநை போன்ற புனித நதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடித் தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்