Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ponneri Lakshmi Temple: தமிழகத்தில் மிகவும் பழமையான மகாலட்சுமி தலம்… இந்த லட்சுமி சுயம்பு தெய்வமா…!

Manoj Krishnamoorthi August 01, 2022 & 16:30 [IST]
Ponneri Lakshmi Temple: தமிழகத்தில் மிகவும் பழமையான மகாலட்சுமி தலம்… இந்த லட்சுமி சுயம்பு தெய்வமா…!Representative Image.

இந்து சமயத்தில் ஆதி கடவுளான ஈசன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவருமே மும்மூர்த்தி எனப்படுவர், இவர்களில்  பிரம்மா படைத்தல், விஷ்ணு காத்தல், ஈசன் அழித்தல்  போன்றவை செய்து பக்தர்களின் வாழ்வியலில் அங்கமாக இருப்பர். அதுபோல மனிதனின் வாழ்வியலின் தேவைகளான கல்வி, செல்வம், வீரம் போன்றவற்றிற்கு அதிபதியான கடவுள் மும்மூர்த்திகளின் தேவிகளாகும். 

இதில் செல்வ வளத்தை நமக்கு அளிக்கும் லட்சுமி தேவியைத் திருமகள் என்று குறிப்பிடுவர். லட்சுமி தேவியின் அருளைப் பெற  வரலட்சுமி விரதம் போன்ற பல விரதங்கள் நாம் இருப்பது காலம் காலமாகப் பின்பற்றுவதாகும். இருப்பினும் நம் முன்னோர்கள் லட்சுமி தேவிக்கு ஆலயம் நிறுவியும் வழிபாடு செய்து வந்தனர். இந்த பதிவில் தமிழகத்தில் இருக்கும் 1000 ஆம் ஆண்டு பழமையான லட்சுமி தேவி திருத்தலத்தைக் காண்போம்.

பொன்னேரி மகாலட்சுமி ஆலயம் (Ponneri Lakshmi Temple)

சென்னை மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் பஞ்சேஷ்டி கிராமத்தில் உள்ள லட்சுமி தேவி ஆலயமாகும். இந்த திருத்தலத்தின் மூலவரான லட்சுமி தேவிக்கு இரு சன்னதி மகாலட்சுமி தேவி மற்றும் துர்கா லட்சுமி சன்னதி உள்ளது.  இந்த இரு சன்னதியில் துர்கா லட்சுமி தேவி சுயம்பு ஆகும். இவ்விரு சன்னதிக்கு பிறகு ஆலயத்தில் சேஸ்தர பாலகரான அருள் மல்லயன் சன்னதியும் உள்ளது.  

சுமார் 1000 வருடங்கள் பழமையான  இந்த ஆலயத்தில் மற்றொரு சிறப்பு அகத்திய நந்தவனம் ஆகும். இந்த ஆலயத்தில் குடி கொண்டு இருக்கும் அன்னை மகாலட்சுமி தேவி ருத்ர பீடத்தில் பத்மாசனத்தில் அபயமுத்திரையில் அருள்பாலிக்கிறார்.  

திருத்தலம் திறக்கும் நேரம் (Ponneri Lakshmi Temple Timings)

காலை: 6:00- 12:00 வரை

மாலை: 4:00- 8:00 வரை

சிறப்பு பூஜைகள் (Ponneri Suyambu Durga Lakshmi Temple Pooja)

துர்கா லட்சுமி தேவிக்கு இங்கு இராகு காலத்தில் தான் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் பலவித உன்னதமான யாகங்கள் நடக்கும் இந்த ஆலயத்தின் மகத்துவம் பிரதி பெற்றதாகும், இந்த திருத்தலத்தில் அஷ்டமி மற்றும் பௌர்ணமி அன்று நடக்கும் யாகத்தில் கலந்து கொள்வது திருமண தடை, குழந்தை பாக்கியம், செல்வ கடாட்சம் போன்றவை அளிக்கும்.

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

Tag: Ponneri Lakshmi Temple | Ponneri Suyambu Durga Lakshmi Temple Pooja | Panchetti Ponneri Suyambu Durga Lakshmi Temple | Ponneri Suyambu Durga Lakshmi Temple | Ponneri Lakshmi Temple History In Tamil | Old Lakshmi Temple In Tamilnadu | 1000 Year Old Lakshmi Temple In Tamilnadu | பொன்னேரி பஞ்சேஷ்டி துர்கா லட்சுமி ஆலயம் | Ponneri Lakshmi Temple Timings | Panchetti Ponneri Lakshmi Temple | Ponneri Panchaseri Lakshmi Temple Contact Number | Ponneri Lakshmi Temple Phone Number

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்