Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Chidambaram Kovil timing: தில்லை கோவிலின்  தினசரி பூஜை நேரமும் தரிசன நேரமும் இதுவா..! இந்த நேரத்தில் தான் அர்த்தசாமம் பூஜை நிகழுமா..!

Manoj Krishnamoorthi June 09, 2022 & 11:30 [IST]
Chidambaram Kovil timing: தில்லை கோவிலின்  தினசரி பூஜை நேரமும் தரிசன நேரமும் இதுவா..! இந்த நேரத்தில் தான் அர்த்தசாமம் பூஜை நிகழுமா..!Representative Image.

அண்டத்தின் மூலப்பொருளான ஆதி சிவனின் ஆலயங்களில் தில்லை நடராஜ கோவில் மிகவும் பிரசித்தியானது ஆகும், பூமியின் மையத்தை நோக்கி அய்யன் சிவனின்  இடதுகால் பெருவிரல் நோக்கி இருப்பது ஒரு முக்கிய சிறப்பாகும். 

சுமார் நான்காயிரம் ஆண்டுகளாக முந்தாகவே தோன்றிய தில்லை, சைவ இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவாரம் பாடிய காவிரி வடகரை சோழ நாட்டில் அமைந்துள்ள (தற்போதைய கடலூர் மாவட்டம்) சிதம்பரம் நடராசர் கோயில் தரிசன நேரமும் (Chidambaram Kovil timing) கோவில்  தினசரி பூஜை தகவல்களையும் அறிய வேண்டுமா..! இவ்வாசகத்தைப் பின்தொடருங்கள் உங்களுக்கு தேவையான தகவல் கிடைக்கும்.

கோவில் தரிசன நேரம் (Chidambaram Kovil timing)

காலை 6:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை

மாலை 5:00 முதல் இரவு 10:00 மணி வரை

ஆலயத்தில் நிகழும் அர்ச்சனை

அஷ்டோத்தர சதானமா

சஹஸ்ரநாமம்  

சம்மேளன சஹஸ்ரநாமம்

பஞ்சாக்ஷர த்ரிசதி

பஞ்ச முக சஹஸ்ரநாமம்

ஏகசமயா லக்ஷார்ச்சனா

ஆலயத்தில் நடைபெறும் அபிஷேகம்

சந்திர மௌலீஸ்வர ஸ்படிகலிங்க அபிஷேகம்

ரத்ன சஹபதி அபிஷேகம்

ஸ்வர்ண ஆகர்ஷண பைரவ அபிஷேகம்

மஹான்யாஸ பூர்வக ருத்ராபிஷேகம்

மஹா ஆருத்ரஜப யஜ்ஞா ஸஹித மஹாருத்ரம்

அதிருத்ரஜப யஜ்ஞா ஸஹித அதிருத்ரம்

ஆலயத்தின்  தின பூஜைகள் (Chidambaram Temple Pooja Timings )

காலை 6:00 மணி பால் நெய் வேத்தியம்

ஈசனின் பாதணிகள் பல்லக்கின் மூலம் பள்ளியறையில் இருந்து  சன்னதிக்கு கொண்டு வரப்படும்.

காலை 7:00 மணி மஹா ஆரத்தி நடைபெறும்.

காலை 7:45 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் தினத்தின் முதல் பூஜையான காலசன்னதி பூஜை நடைபெறும்.

காலை 10:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் இரண்டாம் பூஜையான இரண்டாம் கால பூஜை நடைபெறும்.

காலை 11:30 முதல் நண்பகல் 12:00 மணி வரை உச்சிகாலம் பூஜையான தினத்தின் மூன்றாவது பூஜை நடைபெறும்.

மாலை 5:15 முதல் 6:00 வரை நான்காவது பூஜையான சாயராக்ஷை பூஜையில் ஷடாசோபசார ஆர்த்தி நடைபெறும். 

இரவு 7:00 மணி முதல் 8:00 மணி வரை மீண்டும் இரண்டாம் கால பூஜை நடைபெறும். இந்த பூஜையில் பூஜையில் லிங்க அபிஷேகமும், சிதம்பர ரகசிய பூஜை மற்றும் மஹா ஆரத்தி நடைபெறும்.

இரவு 9:00 மணி முதல் 10:00 மணி வரை தினத்தின் இறுதி பூஜையான அர்த்தசாமம் பூஜையுடன் முடிவுபெறும்.


மேலும் படிக்க: How to Book Chidambaram Temple Online Booking in Tamil:- தில்லை கோயில் தரிசனம் நேரம் இதுவா...  இணையத்தில் பதிவு செய்து சிவனைக் காண்பது இவ்வளவு எளியதா! பற்றி அறிய க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்