Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துமஸ் இரவு பற்றி உங்களுக்குத் தெரியாத கதை.! | Special About Christmas Eve

Editorial Desk Updated:
கிறிஸ்துமஸ் இரவு பற்றி உங்களுக்குத் தெரியாத கதை.! | Special About Christmas EveRepresentative Image.

கிறிஸ்துமஸ் தினம் என்றால், அதற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது மட்டுமல்லாமல், கிறிஸ்துமஸ் இரவிற்கும் தனி ஒரு வரலாறே இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கிறிஸ்துமஸ் ஈவ் குறித்த வரலாற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

✤ உலகமே இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கொண்டாட காத்துக் கொண்டு இருக்கிறது.

✤ இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம் தான் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது 

✤ கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட்” மற்றும்  “ மாஸ்" என்ற இரண்டு வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவாகியுள்ளது.

✤ கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4 வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25 ம் தேதி கொண்டாடி வந்தனர்

✤ வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6 ம் தேதி அன்று இயேசு பிறந்ததாக கூறி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி உள்ளனர்.

✤ கிறிஸ்துமஸ் விழாவின் முக்கிய நிகழ்வாக Christmas Eve [ கிறிஸ்துமஸ் இரவு ] இருக்கிறது.

✤ கிறிஸ்துமஸ் இரவு  என்பது கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாள் அன்று  இரவு கொண்டாடப்படுகிறது.

✤ கிறிஸ்துமஸ் இரவு தினத்திற்கு ஒரு வரலாறு உண்டு. கிறிஸ்தவம் உலகம் முழுவதும் பரவுவதற்கு முன்பு, ஐரோப்பாவில் இருந்த பிற மதங்களைச் சார்ந்த மக்கள் தங்களின் கலாச்சார விழாவாக குளிர்கால விழாவைக் கொண்டாடி வந்தனர்.

✤ அதன் பின் கிறிஸ்தவத்திற்கு மாறியதால், கிறிஸ்தவ சமய நம்பிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டியிருந்தது. இதனால் தங்களுடைய பழைய குளிர்கால கலாச்சார விழாவைக் கொண்டாட முடியவில்லை.

✤ கிறிஸ்துவ மக்கள்  புதிய சமயமான கிறிஸ்தவத்திற்குள் இருந்து கொண்டே தங்களின் பழைய குளிர்கால கலாச்சார விழாவைக் கொண்டாட துவங்கினர்.

✤ ஆரம்பத்தில் குளிர்காலத்தை மையப்படுத்தி கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் இரவு , நாளடைவில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்தி கொண்டாடும் விழாவாக மாறியது.

✤ கிறிஸ்துமஸ் தினத்தை விட கிறிஸ்துமஸ் இரவு முக்கியமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் கிறிஸ்துமஸ் இரவு, கிறிஸ்துமஸ் நாளின் தொடக்கமாகக் கருதப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்