Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in TamilRepresentative Image.

அன்னை பார்வதி தேவி ஒரு அவதாரத்தில் மலைகளின் அரசரான இமவான் மன்னனின் மகளாக பிறக்கிறார். அவர் மீண்டும் சிவனை அடைவதற்குக் கடும் தவம் புரிகிறார். அவருடைய தவத்தினால் சிவன் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து, பார்வதியை மணந்து அவருடன் அழைத்து சென்றுவிடுகிறார். அவர்கள் இருவரும் கந்தமாதான பர்வதத்தில் தங்கி, சில நாட்கள் தங்களுடைய மண வாழ்வினைக் கழித்தார்கள். அதன் பின்பு சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தை மேற்கொண்டார். அப்போது பார்வதி அவருக்கு சேவை செய்வதையே தனது பக்தியாக நினைத்து அவருக்கு அனைத்து சேவைகளையும் செய்தார். அந்த நேரத்தில் அசுரக் குல அரசரான சூரபத்மன் மற்ற அனைத்து தேவர்களையும் சிறைபிடித்து கைது செய்துவிடுகிறான். இதனால் வானுலகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. மூன்று உலகங்களிலும் பேய்களின் ஆட்சியே நடந்தது.

மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in TamilRepresentative Image

அரக்கர்கள், சிறையில் தள்ளப்பட்ட தேவர்களைக் கொடுமை செய்தனர். அந்த துயரங்களுக்கு உள்ளான சமயத்தில் பார்வதியின் முந்தைய அவதாரமான சதியின் தந்தை தட்சன் யாகம் நடத்தினார். அதற்கு பார்வதியை அழைத்தார் ஆனால் சிவபெருமானை அழைக்கவில்லை. இறுதியாக தேவர்கள் நொந்துபோய் பிரம்மன் மற்றும் திருமாலிடம் தோன்றி தங்கள் பிரச்சனைகளைக் கூறி நீங்கள் தலையிட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்று வேண்டினர். அசுரர்களுக்குக் கிடைத்த அற்புத வரத்தின் காரணமாக அவர்களைச் சிவபெருமானின் சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் அழிக்க முடியாது‌ என்று அவர்களிடம் பரிந்துரைத்தார். ஆதலால் சிவபெருமானும் பார்வதி அம்மையும் ஒரு குழந்தையைப் பெற வேண்டும்.

மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in TamilRepresentative Image

சிவபெருமான் தியானத்தில் இருப்பதால் பார்வதியின் மீது ஈர்ப்பை ஏற்படுத்த வேண்டிய தேவை இருந்தது‌. அவர்கள் ஒரு விசித்திரமான யோசனையை நடைமுறைப்படுத்த ஆயத்தமாகினர். காதலின் கடவுளான மன்மதனை அணுகி சிவபெருமானின் கவனத்தை அவருக்கு சேவை செய்துக் கொண்டிருக்கும் பார்வதியின் மீது காம பார்வையாக விழ வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மன்மதனும் அவர்களின் கோரிக்கையை ஏற்று கந்தமாதான பர்வதத்திற்குச் சென்றார். அங்கு அவர் தனது வில்லிலிருந்து காதலைத் தூண்டும் அம்புகளை சிவபெருமானை நோக்கி எய்தினார். அவை தனது தவத்திற்கு ஏற்பட்ட தொந்தரவாக கருதி கோபமடைந்த சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தார். 

மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in TamilRepresentative Image

அதனால் வெளியே வந்த தீப்பிழம்புகள் மன்மதனைச் சாம்பலாக பொசுக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த அனைத்து தேவர்களும் சிவபெருமானை அமைதிப்படுத்த வழிபாடு செய்து தங்களுக்கு நேர்ந்த இன்னல்களைத் தெரிவித்து எங்களுக்கு உதவுவதற்கு தான் மன்மதன் இவ்வாறு செய்ததாக மன்னிப்பு கோரினர். இதனால் சிவபெருமான் மனமிறங்கி மன்மதன் யார் கண்ணுக்கும் தெரியாமல் இருப்பாய் என்ற சாபத்துடன் மன்மதனுக்கு உயிர் கொடுத்தார். மன்மதனை எரித்த அந்த ஆறு தீப்பொறிகள் சரவண பொய்கைக்கு அக்னி பகவனால் கொண்டு செல்லப்பட்டன‌. அங்கு அந்த ஆறு தீப்பொறிகளும் அழகிய ஆறு குழந்தைகளாக வடிவம் பெற்றிருந்தன. அந்த ஆறு குழந்தைகளும் ஆறு கார்த்திகை பெண்களின் பராமரிப்பில் வளர்க்கப்பட்டன. 

மெய்சிலிர்க்க வைக்கும் வைகாசி விசாகம் வரலாறு.. | Vaikasi Visakam 2023 History in TamilRepresentative Image

ஒருமுறை சிவபெருமானும் பார்வதி அம்மையாரும் அந்த சரவண பொய்கைக்கு வந்திருந்தனர். அப்போது தாயான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக கட்டித் தழுவி அவர்களை ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்தியோஜதம் மற்றும் ஆதோமுகம் ஆகிய ஆறு முகங்களுடன் ஒரே உருவமாக மாற்றினார். அந்த ஆறு முகங்களுடன் காட்சியளித்த நாள் தான் இந்த 'வைகாசி விசாகம்'. தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கனா போன்ற தென்னிந்திய மாநிலங்களிலும் வைகாசி விசாகம் முக்கிய விரத நாளாக பார்க்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் இரண்டாவது மாதமான வைகாசியில் பௌர்ணமி திதியும், விசாகம் நட்சத்திரமும் கூடி வரும் நாளையே வைகாசி விசாகம் என்கிறோம். வைகாசி விசாகத்தன்று வேலையும், மயிலையும் வணங்குவது மிக சிறப்பானதாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்