Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் தெரியுமா உங்களுக்கு? | Christmas Thatha History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் தெரியுமா உங்களுக்கு? | Christmas Thatha History in Tamil Representative Image.

கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே நமக்கு குட்டையான, குண்டான உருவத்தோடு, வெள்ளை நிற தாடியுடன், சிவப்பு கலர் வெல்வெட் உடை அணிந்துக்கொண்டு, கோமாளி போன்று குல்லா தலையில் வைத்துக்கொண்டு, முதுகில் ஒரு பெரிய பை நிறைய பரிசுப்பொருட்களோடு, மான் வாகனத்தில் வந்து ஒவ்வொரு கிறித்துமஸ் தினத்திற்கும் மக்களுக்கு பரிசு வழங்குவார் என்பது தான் ஞாபகம் வரும். ஆனால், உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா யார்? இவருக்கும் கிறிஸ்துமஸ் நாளுக்கும் என்ன சம்பந்தம்? என்னக்காவது யோசிச்சி இருக்கீங்களா? வாங்க, தெரிஞ்சிக்கலாம்.

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் தெரியுமா உங்களுக்கு? | Christmas Thatha History in Tamil Representative Image

சாண்டா கிளாஸ் யார்?

கிறிஸ்துமஸ் தாத்தா என்று அழைக்கப்படும் 'சாண்டா கிளாஸ்' (Santa Claus) உண்மையில் கற்பனையால் உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம். நிகோலஸ் என்ற புனிதப் பாதிரியார் துருக்கியில் பிஷப்பாக இருந்து பல ஏழைகளின் துயர்த்தை போக்கிவந்தார். அன்பு, நல்லுறவு, தாராள மனம், குழந்தைகளிடம் விருப்பம் ஆகிய நற்குணங்களுக்கு பெயர் போனவர். இவர், தனக்கு உரிய விருந்து நாளன்று (டிசம்பர் 6) அவ்வூரில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து மகிழ்ச்சி காண்பார். இதனால், தான் இன்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இந்த சம்பிரதாயம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவரின் நினைவாகவே டாக்டர் க்ளெமென்ஸி மூர் என்பவர் கிறிஸ்துமஸ் தாத்தா என்ற கற்பனை பாத்திரத்தை உருவாக்கினார். 

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் தெரியுமா உங்களுக்கு? | Christmas Thatha History in Tamil Representative Image

கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர்

மேற்கத்திய நாடுகளிலும் சில கீழை நாடுகளிலும் மட்டுமே காணப்பட்ட கிறிஸ்துமஸ் தாத்தா தற்போது உலகெங்கும் பரவி அவருக்கே உடைய சிவப்பு ஆடையில் வெள்ளை தாடி, கண்ணாடி சகிதமாக வலம் வரத் தொடங்கி விட்டார். முதலில் டச்சு மக்களால் சிண்டி கிளாஸ் என்று அழைத்துவந்தனர். நாளடைவில் அதுவே சாண்டா கிளாஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால், இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவராக இருக்கும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் உண்மையான பெயர் செயிண்ட் நிகோலஸ். அன்று குழந்தைகளிடம் இவர் காட்டிய அன்பே இன்றும் பல குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு நபராக இருக்கிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்