Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal Donation

Nandhinipriya Ganeshan Updated:
பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் கோலாகலமாக கொண்டாடக்கூடிய பண்டியை என்றால் அது பொங்கல் பண்டிகை தான். அந்தவகையில் இந்த வருடம் ஜனவரி 15 ஆம் தேதி தமிழரின் தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறோம். தை 1 ஆம் தேதி சூரியன் தட்சிணாயனத்தில் இஉர்ந்து உத்தராயணத்திற்கு செல்கிறார். அதாவது சூரியன் வடக்கு நோக்கி நகர தொடங்குவார். அப்போதிலிருந்து பகல் பொழுது அதிகமாகவும் இரவுகள் குறைந்தும் காணப்படும். 

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image

அதுவே ஜோதிடத்தின்படி பார்த்தால், சூரியன் பகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்வார். இதை தான் 'மகர சங்கராந்தி' என்று அழைக்கப்படுகிறது. மார்கழியில் தடைப்பட்டு நின்ற அனைத்து மங்களகரமான வேலைகளும் இந்த தை 1 ஆம் தேதியில் இருந்து தொடங்கலாம். அதுமட்டுமல்லாமல், பொங்கல் பண்டிகையன்று புனித நதிகளில் நீராடிவிட்டு சூரிய பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். 

அதேபோல், இந்த மங்களகரமான நாளில் சில பொருட்களை தானம் செய்வதால் வீட்டில் செல்வம் பெருகுவதோடு சனி தோஷமும் நீங்கும் என்பது ஐதீகம். அந்தவகையில், மகர சங்கராந்தி/தைப் பொங்கல் திருநாளன்று தானம் செய்ய வேண்டிய பொருட்களை பற்றி பார்க்கலாம். 

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image

நெய்:

மகர சங்கராந்தி/பொங்கலன்று நெய் அல்லது அதிலிருந்து தயாரிக்கப்படும் இனிப்புகளை தானம் செய்வதால் வீட்டில் இருக்கும் கஷ்டங்கள், சங்கடங்கள் விலகி, மகிழ்ச்சி, ஒற்றுமை ஓங்கும். ஏனென்றால், நெய் சூரியன் மற்றும் குரு பகவானுக்கு உகந்த ஒரு பொருள். இதை மகர சங்கராந்தி நாளில் தானம் செய்வது என்பது மிகவும் விஷேசமானதாக கருதப்படுகிறது. 

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image

வெல்லம்:

மகர சங்கராந்தி/பொங்கலன்று வெல்லம் தானம் செய்வதும், வெல்லதால் செய்யப்பட்ட பொருட்களை சாப்பிடுவதும் நற்பலன்களை அள்ளிக் கொடுக்கும். ஜோதிடத்தில் வெல்லம் குரு பகவான் மற்றும் வியாழன் பகவான் இருவருக்கும் தொடர்புடையது. எனவே, அந்த வெல்லத்தை இந்த நாளில் தானம் செய்தால் சனி, குரு, சூரியன் மூவரும் மகிழ்ச்சி அடைவார்கள். 

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image

எள்:

மகர சங்கராந்தி/பொங்கலன்று கருப்பு எள் அல்லது வெள்ளை எள்ளால் செய்யப்பட்ட பொருட்களை தானம் செய்வது புண்ணிய பலன்களை கொடுக்கவல்லது. பொதுவாக, சனி பகவானை பிரியபடுத்த எள் தானம் செய்வது வழக்கம். அதேபோல், எள் தானம் செய்வதால் சூரிய பகவான் மற்றும் விஷ்ணு பகவானும் மகிழ்ச்சி அடைவார்கள். அதுவும் இந்த மங்களகரமான நாளில் எள் தானம் செய்வது சனி தோஷத்தையும் நீக்கும். அதேப்போல், சூரிய பகவானை வழிபட்ட பின்னர் நல்லெண்ணெயை தானம் செய்யலாம். இதுவும் சனி பகவானை மகிழ்விக்கும்.

பணக்கஷ்டங்கள் நீங்க பொங்கலன்று தானம் செய்ய வேண்டிய பொருள் இதுதான்.. | Thai Pongal DonationRepresentative Image

உப்பு:

மகர சங்கராந்தி/பொங்கலன்று உப்பு தானம் செய்வதால் தீய மற்றும்  கெட்ட ஆற்றல்கள் அழிவதோடு, உங்க கெட்ட நேரங்களும் விலகி, வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே, உப்பு தானம் செய்வதை மறந்துவிடாதீர்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்